2014ம் ஆண்டை அரசாங்கத்தை கவிழ்க்கும் ஆண்டாக ஐ.தே.க அறிவிப்பு - Sri Lanka Muslim

2014ம் ஆண்டை அரசாங்கத்தை கவிழ்க்கும் ஆண்டாக ஐ.தே.க அறிவிப்பு

Contributors

-gtn-

2014ம் ஆண்டை அரசாங்கத்தை கவிழ்க்கும் ஆண்டாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நான்கு முக்கிய யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிலிருந்து மக்களை பாதுகாத்தல், நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்தல், தலைமைத்துவப் பேரவைக்கு உரிய அதிகாரங்களை வழங்குதல், ஒரே இடத்திலிருந்து கட்சிக் கருத்துக்களை வெளியிடல் ஆகிய நான்கு யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளன. ஜனஜய என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியினர் 100 நாள் அபிவிருத்தித் திட்டமொன்றையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். 2014ம் ஆண்டு முழுவதிலும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க கட்சி திர்மானித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team