2014: வரவு செலவுத் திட்டம் சபையில் இன்று சமர்ப்பிப்பு * விவாதம் நாளை ஆரம்பம்: 23 நாட்கள் தொடரும் * 16 நாட்கள் குழுநிலை விவாதம் * 3ஆவது வாசிப்பின் மீது டிசம்பர் 20இல் வாக்கெடுப்பு - Sri Lanka Muslim

2014: வரவு செலவுத் திட்டம் சபையில் இன்று சமர்ப்பிப்பு * விவாதம் நாளை ஆரம்பம்: 23 நாட்கள் தொடரும் * 16 நாட்கள் குழுநிலை விவாதம் * 3ஆவது வாசிப்பின் மீது டிசம்பர் 20இல் வாக்கெடுப்பு

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தின் எட்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று (21) பிற்பகல் பாராளு மன்றத்தில் சமர்பிக்கப்படுகிறது. பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடுகிறது.

இதன் போது முதலாவது அம்சமாக 2014ம் ஆண்டிற்கான ஐ.ம.சு.மு. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பிக்கிறார். அபிவிருத்தி வேகத்தை பலப்படுத் தவும் சமூக நியாயங்களை நிலைநாட் டவும் இம்முறை வரவு செலவுத் திட் டத்தினூடாக கூடுதல் கவனம் செலுத்த ப்பட இருப்பதாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் சமர்ப் பிக்கப்படுவதை முன்னிட்டு பாராளு மன்றத்திலும் அதனை அண்மித்த பகுதி களிலும் விசேட பாதுகாப்பு ஒழுங் குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களும் சோதனைக்குட்படுத் தப்பட இருப்பதாக தெரியவருகிறது. பாராளுமன்றக் கலரி விசேட அதி திகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட் டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் நாளை முதல் இடம்பெற உள்ளது. இதன்படி இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் 29ம் திகதி வரை நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. குழு நிலை விவாதங்கள் டிசம்பர் 2ம் திகதி ஆரம்பமாகி 20ம் திகதி வரை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு 20ம் திகதி மாலை நடத்தப்பட்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

2014 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்தச் செலவீனம் 154,252 கோடி 25 இலட்சம் 18 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது இதிலே பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிற்காக 25,390 கோடி 29 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து நிதி, திட்டமிடல் அமைச்சிற்காக 16,434 கோடி 407 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 10,601 கோடி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சிற்காக 117,689,998,000 ரூபாவும் பொது நிர்வாக அமைச்சிற்காக 138,208,600,000 ரூபாவும் கல்வி அமைச்சிற்காக 38,847,907,000 ரூபாவும் ஒதுக்கிடப்பட்டுள்ளன. முதற்தடவையாக ஸ்தாபிக்கப்பட்டு ள்ள வட மாகாண சபைக்காக 2014 வரவு செலவுத் திட்டத்தில் 1708 கோடி 10 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதார இலக்குகளை அடையும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அரச துறை மற்றும் பொது மக்களுக்கு கிடைக்க உள்ள சலுகைகள், நிவாரணங்கள் குறித்தும் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குமாறு பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் கோரியுள்ளதோடு, பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்தை கேட்டுள்ளன. இது இலங்கையின் 68 வது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.thinakaran

Web Design by Srilanka Muslims Web Team