2015 பாரிஸ் தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை கருத்து - கோபத்தில் பிரான்ஸ் » Sri Lanka Muslim

2015 பாரிஸ் தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை கருத்து – கோபத்தில் பிரான்ஸ்

_101193504_gettyimages-950838114

Contributors
author image

Editorial Team

(BBC)


மக்கள் கையில் துப்பாக்கி கொடுத்திருந்தால், 2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பிரான்ஸை கோபப்படுத்தியுள்ளது.

“டிஷ்யூம்! இங்கே வாருங்கள்!” என்று தன் கையை துப்பாக்கிப் போல வைத்து தாக்குதல் சம்பவத்தை நடித்துக் காண்பித்தார் டிரம்ப்.

பாரிஸில் 2015-ல் நடந்த துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

2015ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று பாரிஸில் நடைபெற்ற தாக்குதல் குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாகக் கூறிய பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

2015ல் பாரிஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிலர்
Image caption2015ல் பாரிஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிலர்

டிரம்பின் கருத்துகள் “வெட்கக்கேடான” ஒன்று என தாக்குதல் சம்பவத்தின் போது பிரான்ஸ் அதிபராக இருந்த ஃப்ரேன்கோயிஸ் ஹோலேன்ட் தெரிவித்துள்ளார்.

என்ன பேசினார் டிரம்ப்?

டெக்ஸாசில் தேசிய துப்பாக்கி அமைப்பில் பேசிய அதிபர் டிரம்ப், “பிரான்ஸில் துப்பாக்கி வைத்திருப்பது குறித்து கடுமையான சட்டங்கள் இருப்பதாக” தெரிவித்தார்.

“பாரிஸில் யாரிடமும் துப்பாக்கி இல்லை. அங்கு நடைபெற்ற தாக்குதலில் 130க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டது நமக்கு தெரியும். யாராவது அவர்களை பற்றி பேசுவதுண்டா?”

”ஆனால் துப்பாக்கி வைத்திருந்த ஒரு சிறிய பயங்கரவாதிகள் குழு, மக்களை கொடுமையாக கொன்றது.”

2015 பாரிஸ் தாக்குதல் குறித்து டிரம்ப் கருத்து - கோபத்தில் பிரான்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

”ஒரு ஊழியர் அல்லது அங்கிருக்கும் யாராவது ஒருவர் துப்பாக்கி வைத்திருந்து, அதனை பயங்கரவாதிகளை நோக்கி காண்பித்திருந்தால் அவர்கள் ஓடியிருப்பார்கள்” என்று டிரம்ப் பேசினார்.

பிரான்ஸின் எதிர்வினை என்ன?

சமீபத்தில் வாஷிங்டனில் டிரம்பை சந்தித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், இதுகுறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

எனினும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் டிரம்பின் கருத்துகளை நிராகரிப்பதாக தெளிவுப்படுத்தியுள்ளது.

2015 பாரிஸ் தாக்குதல் குறித்து டிரம்ப் கருத்து - கோபத்தில் பிரான்ஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

“துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் குறித்து அந்தந்த நாடு சுயமாக முடிவெடுத்துக் கொள்ள முடியும். துப்பாக்கி வைத்திருப்பது குறித்து கண்டிப்பான நடைமுறை கொண்டிருப்பதில் பிரான்ஸ் பெருமைப்படுகிறது” என்று அமைச்சகம் கூறியுள்ளது.

Web Design by The Design Lanka