2017 ஆம் நிதியாண்டில் பா.ஜ.கவின் வருமானம் ரூ.1,034 கோடி » Sri Lanka Muslim

2017 ஆம் நிதியாண்டில் பா.ஜ.கவின் வருமானம் ரூ.1,034 கோடி

bjp

Contributors
author image

Editorial Team

(bbc)


பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசிய அரசியல் கட்சிகள், 2017ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.1,559.17 கோடி வருமானம் ஈட்டியிருப்பதாக தெரிவித்துள்ளன. இதில் பாஜக மட்டும் மிகவும் அதிகபட்சமாக ரூ.1,034.27 கோடி கணக்கு காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.225 கோடி வருமானம் ஈட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

“தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு 2016-17ஆம் நிதியாண்டில் தேசிய அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த வருமானம், அக்கட்சிகள் செலவு செய்த தொகை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 7 தேசிய அரசியல் கட்சிகளும் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்கு தொடர்பான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 7 தேசிய கட்சிகளுக்கு, 2016-17ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.1,559.17 கோடி வருமானமாக கிடைத்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் ரூ.1,034.27 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இதற்கடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ரூ.225.36 கோடியும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.173 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகவும் குறைவாக ரூ.2.08 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

7 தேசிய அரசியல் கட்சிகளும், 2016-17ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.1,228 கோடியை செலவிட்டுள்ளன. அதில் பாஜக மட்டும் அதிகப்பட்சமாக ரூ.710 கோடி செலவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.321 கோடி செலவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. (வருமானத்தை விட ரூ.96.30 கோடி அதிகமாக செலவு செய்துள்ளது)” என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Web Design by The Design Lanka