2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது - ராஜித » Sri Lanka Muslim

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது – ராஜித

rajitha

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழித்து விட்டு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கமும் அதுதான். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிலர் கூறும் விடயங்களும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும், 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் தெரிவித்திருந்தார்.

Web Design by The Design Lanka