2020 பிரதமராக இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை நியமிக்க இராஜாங்க அமைச்சா் சுஜீவ சேரசிங்க அழைப்பு » Sri Lanka Muslim

2020 பிரதமராக இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை நியமிக்க இராஜாங்க அமைச்சா் சுஜீவ சேரசிங்க அழைப்பு

unp 1

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

2020ல் பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதியாக்கிவிட்டு பிரதம மந்திரி பதவியை முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை அமா்த்துவதற்கும் இராஜாங்க அமைச்சா் சுஜிவ சேரசிங்க – இம்தியாசிடம் அறைகூவல் விடுத்து உரையாற்றினாா். ்நேற்று முன்தினம் (12) ஹெவலக்வலக் டவுனில் ரோசி சேனநாயக்காவை கொழும்பு மேயராக்குவதற்காக நடைபெற்ற ஜ.தே.கட்சி கொழும்பு கிழ க்கு கூட்டத்திலேயே இராஜாங்க அமைச்சா் சுஜிவ மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

 ்இந் நிகழ்வில் ரோசி சேனநயாக்காவினை ஆதரித்து முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கிர் மாக்காா், பிரதம மந்திரி, இரான் விக்கிரம, சாகல ரத்னாயக்கா, மற்றும் கபினட் அமைச்சா்கள் சமுகமளித்திருந்தனா். இச் சா்ந்தப்பத்திலேயே இம்தியாஸ் பாக்கீா் மாக்காரை பாா்த்து நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும்.

கபினட் அமைச்சராகி 2020 ல் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு தற்பொழுது சிறந்த காலம் வந்துள்ளது.

பிரதமா் மந்திரி பதவிக்கு இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் பொருத்தமானவா் என சேரசிங்க அங்கு உரையாற்றினாா். அவரின் பின் உரையாற்றிய இம்தி்யாஸ் இவ் அரைகூவலுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

கொழும்பு மாநகரத்தின் மேயர் வேட்பாளராக ஜ.தே.கட்சி –  உலக பிரச்சித்பெற்றவா், முன்னாள் மலேசிய நாட்டின் துாதுவா், மாகாண சபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ,மகளிா் சிறுவா் விவகார அமைச்சராக இருந்து சிறந்த அனுபவங்களை பெற்றவா் ரோசி சேனநாயக்க. அவா்  தற்பொழுது  தனது நிர்வாகச் செயலாளராகவும்  கடமையாற்றுகின்றாா்.

இந்த நல்லாட்சியினை ஏற்றதும் எமது அரசு    முன்னாள் ஜனாதிபதியின் பெற்ற  கடன்களிலிருந்து  சிறுகச் சிறுக  மீண்டுவருகின்றோம்.  அடுத்த 4 ஆண்டு கால ஆட்சியில் இலங்கையின்  வா்த்தக மையத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை வகுத்து  இலங்கை மீளவும் ஒரு சிறந்த வா்த்தக நாடாக  கட்டியெழுப்பி வருகின்றோம்.

இந்த காலத்திற்குள் கொழும்பினையும்     2020 வரை ஒர் சிறந்த மாநகரமாக  மாற்றுவதற்காக  நீங்கள் ரோசி சேனநாயக்காவையும்  அவருடன் போட்டியிடும் ஏனைய உறுப்பினர்களையும்  தெரிபு செய்யுங்கள் என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினாா்.

unp 1 unp1 unp3

Web Design by The Design Lanka