2021ஆம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்..! - Sri Lanka Muslim

2021ஆம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

2021ஆம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளரும் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருமான பீ.எம்.றியாத் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

இவ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர் கழக விளையாட்டு வீர,வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்பதற்காக online மூலமாக தங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். www.nyscsports.lk எனும் இணையத்தினூடாக தங்களது பதிவுகளை மேற்கொள்ள முடியும். அவ்வாறு online மூலம் பதிவு செய்யாத வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதனை குறிப்பிடுவதுடன் ஒரு கிராம அலுவலர் பிரிவில் வசிப்பவர் அதே கிராம அலுவலர் பிரிவுகளில் காணப்படும் இளைஞர் கழகத்தில் மாத்திரம் விளையாட முடியும்.

28.03.2021 ம் திகதி காலை 08.30 மணிக்கு எல்லே போட்டிகள் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்திலும், மாலை 02.30 மணிக்கு கயிறு இழுத்தல் போட்டிகள் அல் – நஜா விளையாட்டு மைதானத்திலும், 29.03.2021ம் திகதி மாலை 02.30 மணிக்கு கரம் தனி மற்றும் குழு போட்டிகள் அல் அர்ஹம் விளையாட்டு மைதானத்திலும், 02.04.2021 ம் திகதி காலை 08.30 மணிக்கு கடற்கரை கரப்பந்தாட்டம் போட்டிகள் அல் – அர்ஹாம் கடற்கரை மைதானத்திலும், 03.04.2021 ம் திகதி காலை 08.30 மணிக்கு கரப்பந்தாட்டப் போட்டிகள் அல் அர்ஹம் விளையாட்டு மைதானத்திலும், 04.04.2021 ம் திகதி காலை 08.30 மணிக்கு கபடி போட்டிகள் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திலும், 10.04.2021ம் திகதி காலை 08.30 மணிக்கு உதைபந்தாட்ட போட்டிகள் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திலும்,
11.04.2021ம் திகதி காலை 08.30 மணிக்கு கிரிக்கெட் போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்திலும் நடைபெறும்.

மேலதிக தகவல்களுக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஏ.சீத் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மேளனத்தின் உப தலைவருமான எம்.ஏ.எம்.சர்பான் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளரும் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தருமான பீ.எம்.றியாத் ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும். 0772242469/0759999978

Web Design by Srilanka Muslims Web Team