2022 கட்டார் உலகக்கிண்ண அரங்கு பெண்ணுறுப்பு வடிவத்தில்? அல்-வக்ரா அரங்கு குறித்து சர்ச்சை! - Sri Lanka Muslim

2022 கட்டார் உலகக்கிண்ண அரங்கு பெண்ணுறுப்பு வடிவத்தில்? அல்-வக்ரா அரங்கு குறித்து சர்ச்சை!

Contributors

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கான அரங்கொன்று வடிவமைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாரின் அல் வக்காரா நகரிலுள்ள இந்த கால்பந்தாட்ட அரங்கின் வடிவமைப்பானது பெண்ணுறுப்பை போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நகரங்களில் ஒன்றாக அல் வக்காரா விளங்கவுள்ளது. இந்நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள அரங்கின் கணினி மூலமான தோற்றத்த்தை கட்டார் உலகக்கிண்ண ஏற்பாட்டுக்குழு சில தினங்களுக்குமுன் வெளியிட்டது.


45,000 ஆசனங்களைக் கொண்ட இந்த அரங்கின் மேற்புறக் கூரையின் தோற்றத்தைப் பார்த்த சிலர் இது பெண்ணுறுப்பு வடிவில் உள்ளது எனக் கருத்துத் தெரிவித்தமை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரங்கை வடிவமைத்தவர் ஸாஹா ஹாடிட் எனும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சாதாரண கட்டட வடிமைப்பாளர் அல்லர். ஈராக்கில் பிறந்து பிரிட்டனைத்தளமாக்க கொண்ட ஸாஹா ஹடிட் வித்தியாசமான மற்றும் பிரமாண்ட கட்டட வடிமைப்புகளுக்குப் பெயர் பெற்றவர்.

 


63 வயதான ஸாஹா ஹாடிட், சிறந்த தரமான கட்டட வடிமைப்புகளுக்கு வருடாந்தம் வழங்கப்படும் பிரிட்ஸர் கட்டட வடிவமைப்பு விருதை 2004 ஆம் ஆண்டு பெற்றவர். இவ்விருதை வென்ற முதல் பெண் இவர்.
உலகம் பல நாடுகளில் ஸாஹா ஹாடிட் வடிவமைத்த தனித்துவமான வடிவமைப்புடைய பல  கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. டுபாயின் சிக்னேச்சர் டவர்ஸ், பெல்ஜியத்தின் போர்ட் ஹவுஸ்  கட்டடங்களும் இவரின் வடிவமைப்பில் நிர்மாணிக்கப்படுபவையாகும்.
கட்டார் உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக அல் வக்காரா நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள அரங்கை யுநுஊழுஆ நிறுவனத்துடன் இணைந்து  ஸாஹா ஹாடிட் வடிவமைததார். இந்த வடிவமைப்பும் பாராட்டப்படும் என்றே கட்டார் உலகக்கிண்ண ஏற்பாட்டாளர்கள்
எதிர்பாரத்திருப்பர்.
ஆனால், அந்த அரங்கின் தோற்றம் எதிர்பாராத விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
தான் வடிவமைத்த அரங்கின் தோற்றத்தை பெண்ணுறுப்புடன் சம்பந்தப்படுத்தி விமர்சிப்பது  மகிழச்சியளிக்கவில்லை என ஸாஹா ஹாடிட் கூறியுள்ளார்.
‘இந்த விமர்சனம் வெட்கக்கேடானது. ஆண் ஒருவர் இதை வடிவமைத்திருந்தால் இத்தகைய விமர்சனம் எழுந்திருக்காது’ என அவர் கூறியுள்ளார்.

 

– metro

Web Design by Srilanka Muslims Web Team