2024 ரனில் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி !! » Sri Lanka Muslim

2024 ரனில் தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி !!

Contributors


ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தான் 2024 இல் அரசாங்கம் அமைப்பது உறுதி

என்று ஐக்கிய தேசிய கட்டி தவிசாளர் வஜிரா அபேவர்தன கூறியுள்ளார்.


2024 ல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பல எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் கூறினார்.பாலபிட்டி மற்றும் அம்பலங்கொட ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று குழு கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்தார்.அரசாங்கத்தை கையகப்படுத்தும் திட்டங்களை முழுமையாக வெளியிட முடியாது என்றும், அதனை மிக விரைவில் மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தில் ஆழ்ந்த ஏமாற்றம் அரசாங்க அமைச்சர்கள் 2024 இல் புதிய அரசாங்கத்தை அமைக்க கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka