21 ஆவது திருத்தம் இன்று அமைச்சரவையில்! - Sri Lanka Muslim
Contributors

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வரைவு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

கட்சித் தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் விரைவில் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் குறைந்தது இரண்டு சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. கலந்துரையாடலின் முடிவுகளின் அடிப்படையில் நீதியமைச்சரால் வரைவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான ஆவணம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர், அரசியலமைப்பு திருத்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்படும்.

Web Design by Srilanka Muslims Web Team