2272 லீற்றர் எரிபொருள் கையிருப்புடன் 10 பேர் கைது..! - Sri Lanka Muslim

2272 லீற்றர் எரிபொருள் கையிருப்புடன் 10 பேர் கைது..!

Contributors

சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேகரித்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2272 லீற்றர் எரிபொருளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட எரிபொருள் கையிருப்புகளில் 2,014 லீற்றர் பெட்ரோல், 238 லீற்றர் டீசல் மற்றும் 20 லீற்றர் மண்ணெண்ணெய் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team