24ஆம் திகதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுடன் முக்கிய சந்திப்பு » Sri Lanka Muslim

24ஆம் திகதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுடன் முக்கிய சந்திப்பு

Contributors

நடைபெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதிவரை பெற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

தேர்தல்கள் நடைபெறவுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் அரசாங்க தொழில் நிமித்தம் வேறு மாவட்டங்களில் தொழில் புரிவோர் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும். இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுடன் முக்கிய சந்திப்பொன்றை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய முன்னெடுக்கவுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 26ஆம் திகதி காலை 8 மணிக்கு தேர்தல்கள் ஆணையாளர், மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. அன்றைய தினமே முற்பகல் 11 மணிக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுடனும் விசேட சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது.

 

அனைத்து சந்திப்புகளின்போதும் தேர்தல்கள் ஆணையாளர் மேல் மற்றும் தென் மாகாண தேர்தல்களின் பூர்வாங்க ஏற்பாடுகள், வேட்புமனு தாக்கல் ஆகியன தொடர்பில் ஆராயவுள்ளார்.(tk)

Web Design by Srilanka Muslims Web Team