'இஸ்லாத்தினூடாக கல்வி எழுச்சி மாநாடு' - Sri Lanka Muslim

‘இஸ்லாத்தினூடாக கல்வி எழுச்சி மாநாடு’

Contributors
author image

சலீம் றமீஸ்

பாலமுனை அல்- மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கமும், பாடசாலை அபிவிருத்திக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த ‘இஸ்லாத்தினூடாக கல்வி எழுச்சி மாநாடு’ பாலமுனை பிரதேசத்தில் இடம் பெறவுள்ளது.

 

‘நாம் அறியாத சில உண்மைகளும் நம சமூகத்தை சீரழிக்கும் சீர்கேடுகளும்’ என்ற தலைப்பில் 2014.09.13ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெறவுள்ள இந்த கல்வி எழுச்சி மாநாடானது இரண்டு கட்டங்களாக இடம் பெறவுள்ளது. காலையில் பாடசாலை மாணவர்களுக்கு பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய ஆராதனை மண்டபத்திலும், பிற்பகல் பெற்றோர்களுக்கு அல் – மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தின் முன்றலிலும் நடை பெறவுள்ளது.

 

மிக பிரசித்து பெற்ற உலமாவான அஷ்ஷெய்க் இம்றான் ஹஸன்(நுழாரி) அவர்களினால் இந்த மார்க்க சொற்பொழிவு இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த நிகழ்வினை நேரடியாக www.ACMYC.com எனும் இஸ்லாமிய இணையதளத்தில் ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது,

Web Design by Srilanka Muslims Web Team