விபுலாநந்தரும் முஸ்லிம்களும் நூல் வெளியீடு - Sri Lanka Muslim

விபுலாநந்தரும் முஸ்லிம்களும் நூல் வெளியீடு

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னை நாள் அதிபரும் ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளருமான மருதூர் ஏ. பீர் முகம்மது எழுதிய விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும் எனும் நூல் வெளியீடு 20ம் திகதி செப்டம்பர் 2014 சனிக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு மூத்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் தலைமையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும்.

 

வரவேற்புரையை வைத்திய கலாநிதி தாஸிம் அகமதும், தொடக்கவுரையை மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்தும் வழங்கவுள்ளனர்;.  நூலின் முதற்பிரதியை தமிழ்த் தொண்டாலர் புரவலர் ஹாசீம் உமர் சிறப்புப் பிரதியை கட்டடக் கலைஞர் இஸ்மாயில் பெற்றுக்கொள்வார்கள்.

 

கொழும்புத் தமிழ்ச்சங்க தலைவர் ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழியியல் துறை தலைவர் கலாநிதி. றமீஸ் அப்துல்லாஹ், கொழும்புத் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் கலாபூசணம். தம்பு சிபசுப்பிரமணியம், ஓய்வுபெற்ற சுங்க அதிகாரி. எஸ்.எச்.எம். அலி ஆகியோர் சிறப்புரையாற்றுவர்;.

 

சிரேஷ்ட ஒலிபரப்பாளர் கே. நாகபூசணியின் நிகழ்ச்சித் தொகுப்பில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வின் ஏற்புரையை நூல் ஆசிரியர் ஏ.பீர் முகம்மது வழங்குவார்.

 

கடந்த 22.06.2014 அன்று நடைபெறவிருந்த இந்நிகழ்வு நாட்டில் நிலைகொண்டிருந்த இயல்பு நிலை பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team