26 ஆணிகள் போட்டியிடும் றபீக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமானது..! - Sri Lanka Muslim

26 ஆணிகள் போட்டியிடும் றபீக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமானது..!

Contributors

எம்.என்.எம். அப்ராஸ்

சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தின் 26 அணிகள் போட்டியிடும் அணிக்கு ஐவர் ஏழு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட “”றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்” ஆரம்ப நாள் நிகழ்வு இன்று (09) மாலை சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் விளாஸ்டர் விளையாட்டுக்கழக முகாமையாளர் எம்.ஐ.எம். பஸ்மிரின் நெறிப்படுத்தலில் கழகத்தின் தலைவர் ஏ.எல். முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண மற்றும் அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளனங்களின் செயலாளர் சிதாத் நாலக லியனாராச்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் றபீக் கட்டுமான நிறுவன பணிப்பாளர் ஏ.எம். றபீக், சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். சபூர்தீன், விளாஸ்டர் விளையாட்டு கழக தலைவரும், அபிவிருத்தி உத்தியோக்கத்தருமான ஆர்.எம். இம்தாத், கழக செயலாளரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர் ஏ.சி.எம். நிஸார், கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினர் யூ. எல்.என். ஹுதா, உட்பட அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளன பிரதிநிதிகள், வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team