26 பலஸ்தீன கைதிகளை விடுவித்தது இஸ்ரேல் - Sri Lanka Muslim
Contributors

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக நேற்று இஸ்ரேல் 26 பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது.

விடுதலையான பலஸ்தீனர்களுக்கு மேற்குக் கரை மற்றும் காசா மக்கள் பாரிய வரவேற்பு அளித்தனர்.

பலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை அனுமதி அளித்த போதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மேன்முறையீடு செய்ய இரண்டு தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கைக்கு முன்னர் கொலை அல்லது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 19 முதல் 28 ஆண்டுகள் வரை சிறை அனுபவித்த பலஸ்தீனர்களே விடுவிக்கப்பட் டனர்.

மொத்தம் 104 பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் இஸ்ரேல் உடன்பாட்டின் கீழ் மூன்றாவது கட்டமாக இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுதலையான 8 பலஸ்தீனர்கள் இஸ்ரேல் சோதனைச் சாவடியைத் தாண்டி காசா மற்றும் கிழக்கு ஜெரூசலத்திற்கு பயணித்ததோடு மேலும் 18 பேர் மேற்குக்கரையின் ரமல்லாவை நோக்கிச் சென்றனர்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் விடுதலையானோரை தனது தலைமையகத்தில் வைத்து வரவேற்றார். முன்னர் கடந்த ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்ட 52 பலஸ்தீனர்களுக்கும் மக்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. பலஸ்தீனில் இந்த கைதிகளின் விடுதலைக்கு பாரிய வரவேற்பு அளிக்கப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் குடும்பத்தினர் இவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

“இவர்கள் கால குண்டுகள். இவர்கள் எங்கு போனாலும் கொலையில் ஈடுபடுவார்கள். அதுதான் அவர்களது வாழ்க்கையின் குறிக்கோள்” என்று பாதிக்கப்பட்ட இஸ்ரேலியரின் சங்கமான அலமகோரின் உறுப்பினர் மிர் இண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாம் தேர்வு செய்யப்பட்டது இலகுவான முடிவுகள் எடுக்கவில்லை என்று இந்த விடுதலையை இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நியாயப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருக்கும் பலஸ்தீன கைதிகள் விவகார அமைச்சர் இஸ்ஸா கரகாஸ், “இஸ்ரேல் ஒரு கொலைகார தேசம், இந்த கைதிகள் எமது சுதந்திர வீரர்கள்”

Web Design by Srilanka Muslims Web Team