3ஆவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் பிரேரனை:- Sri Lanka Muslim

3ஆவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் பிரேரனை:-

Contributors
author image

Editorial Team

மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை  உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்யிடுவது தொடர்பாக பிரபல ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் மூத்த சட்டத்தரணிகளின் ஆலோசணைகளை அரசாங்கம் பெற்று வருவதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் யோசனைக்கு அமைவாக வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் அமைச்சர்களான அனுரபரியதாஷன யாப்பா, டளஸ் அழகபெருமா ஆகியோர் இந்த  விடயம் தொடர்பாக சட்டத்தரணிகளை அணுகி உள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.

 

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும்  சில பொது அமைப்புகள் மனுத்தாக்கல் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிரான முறையில்  செயற்பட்டு அந்த மனுவை முறியடிப்பதற்கு ஏற்றப மேற்படி அமைச்சர்கள்; தீவிரமாக  செயற்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

 

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக போட்டியிட முடியும் என்பதை உறுதிப்படுத்த விசேடபிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அரசாங்கம் ஆலோசிப்பதாக அமைச்சரவை தகவல்களை மேற்கோள்காட்டி செய்தியாளர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. (GTN)

Web Design by Srilanka Muslims Web Team