'30 வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும்' - வாசுதேவ நாணயக்கார! - Sri Lanka Muslim

’30 வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும்’ – வாசுதேவ நாணயக்கார!

Contributors

உத்தேச மின்சார கட்டண திருத்தங்களினால் 30 % வீதமான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் நுகர்வோர் 100 வீத அதிகரிப்பை எதிர்நோக்க நேரிடும் எனவும், மின் கட்டணத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம் அலகு ஒன்றின் விலை ரூபா 2.50 இலிருந்து, ரூபா 6 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் கட்டணங்களை செலுத்த முடியாததால், இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பான்மையான இலங்கையர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்கள் என்பதால் வாழ்க்கை செலவுகளை ஈடுகட்ட முடியாதுள்ளது.

மின்கட்டண விலை இரட்டிப்பாகும் போது, உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நபர்களினால் எவ்வாறு மின்சார கட்டணத்தை செலுத்த முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team