32 இஸ்லாமிய அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி பெற உடன்படிக்கை செய்ய தடை..! - Sri Lanka Muslim

32 இஸ்லாமிய அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி பெற உடன்படிக்கை செய்ய தடை..!

Contributors

இலங்கைக்குள் மத அடிப்படைவாத நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

இப்படியான அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சவுதி அரேபியா, கட்டார், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்கள் இலங்கையில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளது என்பது தெரியவந்ததை அடுத்தே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த நிதி தொடர்பாகவும் அது சம்பந்தமான எவ்வித அறிக்கைகளையும் அரசாங்கத்தில் சமர்ப்பிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

11 தமிழ் பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் 32 இஸ்லாமிய அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்திற்குத் தெரியவந்துள்ளதாகச் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ்வின்

Web Design by Srilanka Muslims Web Team