34 உறுப்பினர்களை தெரிவு செய்ய 617 வேட்பாளர்கள் போட்டி - Sri Lanka Muslim

34 உறுப்பினர்களை தெரிவு செய்ய 617 வேட்பாளர்கள் போட்டி

Contributors
author image

Editorial Team

ஊவா மாகாண சபை ​தேர்தல் நாளை (20) நடைபெறவுள்ளது. 34 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
 
நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 22 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைகள் சார்பில் 617 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்கென ஊவா மாகாணத்தில் 9 இலட்சத்து 42 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
 
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 பேர் நேரடியாக வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவர். இவர்களுக்கு மேலதிகமாக இருவர் போனஸ் ஆசனங்கள் மூலம் தெரிவாகுவர்.
 
ஊவா மாகாணத்திலுள்ள பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமே நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கமைய, மாகாணத்தின் 12 தேர்தல் தொகுதிகளிலும் 833 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team