36 குழந்தைகளுக்கு தந்தையான பாகிஸ்தானியரின் ஈமான் » Sri Lanka Muslim

36 குழந்தைகளுக்கு தந்தையான பாகிஸ்தானியரின் ஈமான்

p

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


பாகிஸ்தானில் குழந்தைகள் பிறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில், ஒரு பெண்ணுக்கு குறைந்தது மூன்று குழந்தைகள் உள்ளன என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானில், 1998ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 13.5 கோடியாக இருந்தது. 18 ஆண்டுக்கு பின், அங்கு மக்கள் தொகை மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்ட தகவல் படி, பாகிஸ்தானின் மக்கள் தொகை 20 கோடியை நெருங்கி விட்டது.

ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு, பாகிஸ்தானில் சட்டத்தில் அனுமதி உள்ளது. இதனால், அங்கு பல ஆண்களுக்கு இரண்டு மனைவியர் உள்ளனர்.

இவ்வாறு ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொண்டதால், அங்கு வசித்து வரும் 3 ஆண்களுக்கு 96 குழந்தைகள் உள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பன்னுவை சேர்ந்தவர் குல்ஜர் கான். இவருக்கு மூன்று மனைவியர் மூலம், 36 குழந்தைகள் பிறந்துள்ளன. இவரின் மூன்றாவது மனைவி, இப்போது கர்ப்பமாக உள்ளார்.

இதுபற்றி கான் கூறுகையில், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதை, எங்கள் மதம் தடுக்கிறது. மேலும், நாம் விரும்பினால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இறைவன் அருள் இருந்தால் மட்டுமே குழந்தை பிறக்கும்.

பிறக்கும் குழந்தைகளுக்கு உணவும், வசிப்பதற்கு தேவையான வசதிகளையும், இறைவன் வழங்குவார். ஆனால், நமக்கு தான் அவர் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka