4 தசாப்த கால மருத்துவ சேவையில் இருந்து மருத்துவ கலாநிதி றிஸ்வி சரீப் விடைபெறுகின்றார் - Sri Lanka Muslim

4 தசாப்த கால மருத்துவ சேவையில் இருந்து மருத்துவ கலாநிதி றிஸ்வி சரீப் விடைபெறுகின்றார்

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

4 தசாப்த கால மருத்துவ சேவையில் இருந்து இந்த நாட்டுக்கு பாரிய உண்னத புணிதமான பணியாற்றிய பேராசரியர் மருத்துவ கலாநிதி விஞ்ஞான வித்தியோதி றிஸ்வி சரீப் நாளை ஓய்வு.

 
பிரியாவிடை வைபவம் நாளை(26)ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை.08.00 மணிக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 59ஆம் இலக்க வார்டின் உள்ள கூட்ட மண்டபத்தில் நடைபெறும். இந்த நாட்டில் வைத்திய அமைச்சர்களாக பணியாற்றியவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளும் அவரது சக வைத்தியர்களும்  இந் நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

 

பேராசிரியர் கொழும்பு சாஹிராக் கல்லூரி, ரோயல் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழக எம்.பி.எஸ், அதன் பின்னர் எப்.ஆர்.சி.பி லண்டன், எப்.ஆர்.சி.பி (எடி) எப்.சி.சி, எப்.பி.எல் ஜ.பி. எப்.ஜ.எம்.  ஆகிய துறைகளில் விசேட பட்டம் பெற்று லண்டன் மருத்துவ பல்கலைக்கழகம் அத்துடன் மருத்துவ விரிவுரையாளர், தமது கலாநிதி பட்டத்தை பாம்பு கடி விசம், மற்றும் சிறுநீர்ப்பை வீங்குதல் மற்றும்  முதலாவது இலங்கையில் கிட்டினி சத்திரிசிகிச்சை ஏற்படுத்தி நிபுணராக இன்றும் கடமையாற்றுகின்றவர்.

 

கொழும்பு மருத்துவ பட்டமேற்படிப்பு பல்கழைக்கழகத்தின் பணிப்பாளர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், மாளிகாவத்தையில் உள்ள கிட்டினி மருத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஆகிய வற்றுடன் தேசிய வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கட்டில்களைக்கொண்ட 41ஆம் வார்ட், 48ஆம் வார்ட் பொறுப்பாக இருந்தவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்களை தனது உதவியாளர்களை பயிற்சியளித்தவர், அத்துடன் கடந்த 40 வருடகாலத்திற்குள் சகல சமுகத்தில் இருந்தும்   இலட்சத்திற்கும்  மேற்பட்ட சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டவர்.

 

அண்மையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள முஸ்லீம் வைத்தியர்களுக்காக தொழுகை அறை ஒன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team