40 இலட்சம் மாணவர்கள் பங்களிப்போடு மரக்கறிவகைகள், பழவகைகள், நடும் திட்டம் - Sri Lanka Muslim

40 இலட்சம் மாணவர்கள் பங்களிப்போடு மரக்கறிவகைகள், பழவகைகள், நடும் திட்டம்

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

நாடுமுழுவதிலும் திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2014 ஒக்டோபர் 20ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும். அத்தினத்தில் சகல மாகாணங்களிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10012 பாடசாலைகளிலும் 40 இலட்சம் மாணவர்கள் பங்களிப்போடு  மரக்கறிவகைகள், பழவகைகள், நடும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் கல்வியமைச்சும்  விவசாய அமைச்சுக்களின் பங்களிப்போடு இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 

 

இத் திட்டத்தின் நோக்கம் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைப்பருவத்திலேயே விவசாய உற்பத்திகளில் தம்மை ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  இதன் முலம் இந்த நாட்டின் விவசாய உற்பத்தித்துறையில் எதிர்கல சமுதாயம்  இத்துறையில் தண்னிரைவு  காண்பதற்கு வழிவகுக்கும் என  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜப்க்ச தெரிவித்தார்.

 

மேற்கண்டவாறு இன்று(5) காலை பத்தரமுல்லை இசுருபாயவில் கல்வியமைச்சில் மேற்படி திட்டத்திற்காக கல்விஅமைச்சு, விவசாயஅமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்களின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான முழுநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

 

இந் நிகழ்வின் ஆரம்ப விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன, பிரதி கல்வியயமைச்சர் மொஹான் லால் கெயிரு மற்றும் விவசாய,  கல்வி, அமைச்சுக்களின் செயலாளாகளும் உரையாற்றினார்கள்.  

 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ச –
இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக எனது அமைச்சு நிதி உதவித்திட்டங்களை ஒதுக்கியுள்ளது.  அத்துடன் தத்தமது பிரதேசத்தில் உள்ள விவசாய அதிகாரிகள் பாடசாலை மாணவர்களுக்கும் நாட்டில் உள்ள பாடசாலைகளின் கடமையாற்றும் 6000 ஆராயிரம் விவசாய ஆசிரியர்களுக்கும் பயிற்சிகளையும் அவரவர் பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்திற்கு ஏற்ற விதைகள் பசளைகள், மற்றும் அவற்றினை சுற்றி வேலியமைத்தல் போன்றவற்றுக்கு உதவியளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் நாடடின் உள்ள பாடசாலை மாணவர்கள் அலறி மாளிகையை பார்வையிட வரும் மாணவர்களுடன் ஜனாதிபதி உடன் சென்று அவர்களை கதைத்து அவர்களது குறைபாடுகளை கேட்றிவார்.

 

அப்போதெல்லாம் அம்மாணவர்கள் மலசலகூட வசதி இல்லாத குறையை ஜனாதிதியிடம்  கூறினார்கள். அதற்காகவே எனது அமைச்சு இத்திட்டத்தினை பாரமெடுத்து மலசலகூடம் இல்லாத பாடசாலைகளை இனம் கண்டு கல்வியமைச்சின் ஊடக நிதியுதவி அளித்து இத்திட்த்தினை அமுல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

 

கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன
பாடசாலைகளில் 10 பேர்ச் மற்றும் அதற்கும் மேற்பட்ட காணிகள் ;இருக்கும் பாடசாலைகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இந்த நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் யுணிசப் நிறுவனத்தின் ஊடாக  மலசல கூடங்களை நிறுவுவதற்காக நிதியுதவி அளித்தது. அத்துடன் பாடசாலைகளில் பௌதீக வளம் குன்றிய பாடசாலைகளுக்கு நிதியுதவி அளித்துள்ளது.

 

 அதே போல் முன்றாவது முறையாக திவிநெகும் திட்த்தினை பாடசாலைகளில் அமுல்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளது. எனது தேர்தல் தொகுதிக்கு மட்டும் 6000 மில்லியன் ருபா வருடாந்தம் அரசின் அபிவிருத்தி திட்த்திற்கு நிதிஉதவி ஒதுக்கப்பட்டுள்ளது. 1989 காலப்பகுதியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 25 இலட்சம் ருபா மட்டுமே நிதிஉதவி ஒதுக்கப்பட்டது. தற்போது அந்த நிதி பண்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

 

நேற்று மூன்தினம் தகவல் தொழில் நுட்ப ஆசிரியர்கள் 150 நியமனம் வழங்கப்பட்டது. மேலும் 4000 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் வழங்கப்படும் க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம் பாடம் சித்தியெயாவிட்டாலும் அவர் கள் உயர்தரம் கற்பதற்கும் இந்த விவாசய திட்டத்தில் தண்னை அர்ப்பணித்து இத்துறையில் அவர் சிறந்த விவேகம் பெற்று தாம் ஒரு விவசாயத்துறையில் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யும் மாணவர்களாகவே இந்த நாட்டின் கல்வித் திட்டம் வரையப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
 
   

SAMSUNG CSC

 

SAMSUNG CSC

Web Design by Srilanka Muslims Web Team