400 பில்லியனை மக்களிடம் கொள்ளையடித்த அரசாங்கம் - ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்..! - Sri Lanka Muslim

400 பில்லியனை மக்களிடம் கொள்ளையடித்த அரசாங்கம் – ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்..!

Contributors

அரசாங்கம் சுமார் 400 பில்லியன் ரூபாவை மக்களிடமிருந்து கொள்ளையடித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

2018ம் ஆண்டு தான் அறிமுகம் செய்த எரிபொருள் சூத்திரம் நடைமுறையில் இருந்தால் மக்கள் இன்று அதன் நன்மையை பெற்றிருப்பர் என மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.

63.19 டொலராக இருந்த மசகு எண்ணெய் கொவிட் பரவல் காரணமாக கடந்த வருடம் வரலாற்றில் இல்லாத அளவு 26 டொலருக்கு குறைந்ததாகவும் ஆனால் அப்போது அதன் பிரதிபலனை மக்களுக்கு அரசாங்கம் வழங்கவில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team