ஜனநாயகவாதிகளின் போராட்டத்தை ஒடுக்க தஹ்ரீர் சதுக்கத்தை எகிப்திய சர்வாதிகார ராணுவம் மூடியுள்ளது. - Sri Lanka Muslim

ஜனநாயகவாதிகளின் போராட்டத்தை ஒடுக்க தஹ்ரீர் சதுக்கத்தை எகிப்திய சர்வாதிகார ராணுவம் மூடியுள்ளது.

Contributors

ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயக வழியில் மக்கள் போராட்டம் நடத்துவதற்கு அஞ்சி பிரபலமான தஹ்ரீர் சதுக்கத்தை எகிப்திய சர்வாதிகார ராணுவம் மூடியுள்ளது.

முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றியதில் முடிவடைந்த மக்கள் எழுச்சி போராட்டத்தின் மையமான தஹ்ரீர் சதுக்கத்தின் அனைத்து வழிகளையும் தடைகளை ஏற்படுத்தியும், கம்பி வலைகளை சுற்றிலும் கட்டியும் மூடியுள்ளது ராணுவ சர்வாதிகார அரசு.

அதிபர் முர்ஸியை ராணுவம் சதிப் புரட்சி மூலம் பதவியில் இருந்து நீக்கியதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடந்து வரும் ராபிஆ அல் அதவிய்யா சதுக்கத்தை ராணுவத்தின் கவச வாகனங்கள் சூழ்ந்துள்ளன. சூயஸ், அலெக்ஸாண்ட்ரியா, இஸ்மாயிலிய்யா, போர்ட் ஸைத் ஆகிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகவாதிகளின் போராட்டத்தை ஒடுக்க ராணுவ சர்வாதிகார அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த ராணுவ சதிப் புரட்சியை எதிர்க்கும் ஒருங்கிணைந்த கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

போலீசின் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவோருக்கு சிறைத் தண்டனையும், பெருந்தொகை அபராதமும் விதிக்கப்படும் என்று கடந்த வாரம் ராணுவ சர்வாதிகார அரசு சட்டம் கொண்டு வந்தது.

சில தினங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். கெய்ரோவில் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக மாணவர் பலியானார். நெற்றியில் குண்டு பாய்ந்த மாணவர் முஹம்மது ரிழா மரணமடைந்தார்.

அலெக்ஸாண்ட்ரியாவில் 21 பெண்களை காவலில் எடுத்த நடவடிக்கையை கண்டித்து பல நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

Web Design by Srilanka Muslims Web Team