45 அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நிலைமை உள்ளது!- ருவான் விஜேவர்தன - Sri Lanka Muslim

45 அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நிலைமை உள்ளது!- ருவான் விஜேவர்தன

Contributors

அரசாங்கத்தில் அதிருப்திக் கொண்டுள்ள 40 முதல் 45 வரையான முக்கிய அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

மினுவங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியில் பிரச்சினைகள் அதிகமாக இருப்பதாக அரசாங்கம் கூறி வந்தாலும் அதிகளவான பிரச்சினை அரசாங்கத்திற்குள்தான் இருக்கின்றது.

அரசாங்கத்தில் இருக்கும் 40 முதல் 45 வரையிலான முக்கிய அமைச்சர்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதுடன் அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நிலைமை காணப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய பிரச்சினைகள் எதுவுமில்லை. சிறிய பிரச்சினையே உள்ளது. இது குறுகிய காலத்தில் தீர்க்கப்படும்.

அரசாங்கத்திற்குள்யே தற்பொழுது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தயராக உள்ளனர்.

கட்சிக்குள் இருக்கு சிறிய பிரச்சினைகளை சீக்கிரமாக தீர்த்து கொள்ளுமாறு அவர்கள் கூறுகின்றனர். கட்சியின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர சஜித் பிரேமதாச, தலதா அத்துகோரள ஆகியோர் தலைமைத்துவச் சபையில் இருக்க வேண்டும்.

அரசாங்கம், சீனாவிடம் கடனை பெற்று சிக்கிக் கொண்டுள்ளது. இதன் காரணமாக வரி விதிப்புகளை அதிகரித்துள்ளது. அரசாங்கம் கட்டான பிரதேசத்தில் 5 கசினோ நிலையங்கள் ஏற்படுத்தப்பட திட்டமிட்டுள்ளது.

கிராமத்தில் உள்ளவர்கள் கசினோ சூதாட்டத்திற்கு அடிமையானால் குடும்ப பொருளாதாரம் வீழ்ச்சியடையும். வெளிநாட்டவர்கள் கசினோ விளையாட இலங்கை வருவதில்லை. எதிர்காலத்தில் அமையும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் ஊழல் மோசடிகள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றார்.(lankawin)

Web Design by Srilanka Muslims Web Team