கட்டாரில் விஷேட பயான் நிகழ்வு - Sri Lanka Muslim
Contributors
author image

U.L. அலி அஷ்ரஃப் - டோஹா கட்டார்

இன்றைய உலகின் நவீன கண்டுபிடிப்புகளுக்குள் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் எமது இளைஞர் யுவதிகள் மேற்கெத்தேய சிந்தனைக்குள் சிறைப்பட்டு முடியப்போகும் இவ்வுலகின் இன்பங்களுக்குள் இரைதேடிக்கொண்டிரிக்கிறார்கள்.

 

இந் நிலை தொடருமானால் எதிர்காலத்தில் இவர்களால் உருவாக்கப்படும் சமூகம் றசூல் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச்செய்த, நீரில் அடிபட்டுச் செல்லும் தூசுகளாய் துன்பப்படுவார்கள் என்பதும், ஒரு அநாகரிக வாழ்வியலுக்குள் அகப்பட்டு நமது முன்னோர்களான சலபுகளின் வழிமுறைகளை தெரியாத ஒரு பாவி சமூகமாக உருவெடுத்து எமது சமூகத்தின் வீழ்ச்சிக்கு நிச்சயம் வழிகோலுவார்கள் என்பது திண்ணம்.

 

எனவேதான் எமது சமூகத்தை புனித இஸ்லாமிய வழிமுறைக்குள் புடம்போடவேண்டிய கட்டாயத்தேவை மார்க்கம் கற்ற அனைவருக்கும் தேவையாக உள்ளது. இந்த உயரிய நோக்கத்திற்காக வாரம் தோறும் மார்க்க விளக்க நிகழ்ச்சிகளை இலங்கை தஹ்வா நிலயம் கட்டார் (SLDC Qatar) நடத்திவருகிறது.

 

அந்த வகையில் இவ்வாரம் அதாவது எதிர்வரும் வியாழக்கிழமை 02.04.2015 இரவு 9.00 மணிக்கு டோஹா அல்மனா டவருக்கு பின்னால் அமைந்துள்ள கஸ்ஸாபி பள்ளிவாலயலில் விசேட சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

 

இந்நிகழ்சிக்கு சிறந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க் டாக்டர். அம்ஜத் ராஸிக்(மதனி) Phd. அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். எனவே சஹோதர சஹோதிரிகள் மிகவும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

qatar qatar.jpg11

Web Design by Srilanka Muslims Web Team