5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்பட மாட்டாது!- ஜனாதிபதி - Sri Lanka Muslim

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்பட மாட்டாது!- ஜனாதிபதி

Contributors

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது;

பலர் பல்வேறு கருத்துகளைக் கூறலாம். ஆனால் அவை அரசாங்கத்தின் கருத்தாக அமையாது. இதன்படி புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சர் கூறிய கருத்து அரசாங்கத்தின் கருத்தாக அமையாது.

5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பாக அரசாங்கம் எந்தத் தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் இது தொடர்பாக குழப்பமடையத் தேவையில்லையெனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாட்டில் சில முக்கிய விடயங்கள் தொடர்பாக இவர்கள் கூறுவதை அரசாங்கத்தின் கருத்தாக மக்கள் தவறான விதத்தில் புரிந்து கொள்ளலாம்.

இதனால் சகலரும் சிந்தித்து கருத்துக் கூறவேண்டுமெனவும் ஜனாதிபதி அங்கிருந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team