5 தங்க விருதுகளை பெற்ற பாத்திமா சியாமா..! - Sri Lanka Muslim

5 தங்க விருதுகளை பெற்ற பாத்திமா சியாமா..!

Contributors

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தினால் எம்.ஏ. பாத்திமா சியாமாவிற்கு ஐந்து தங்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் 22ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் பீடத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவினைச் சேர்ந்த இவர், பொருளியல் துறையில் விசேட இளமானிப் பட்டத்தினை முதற் தர சித்தியுடன் பெற்றுக்கொண்டார்.

காலி, காலிஹல பிரதேசத்தினை பிறப்பிடமாகக் கொண்ட இவர், காலி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். இந்த பட்டத்திற்கான பரீட்சைகளில் இவர் அதியுயர் புள்ளிக்கை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இவருக்கு பின்ரும் தங்கள் விருதுகள் வழங்கப்பட்டன:

1. Honorable Lalith Athulathmudali Memorial Gold Medal – Best Academic Performance in the University

2. Honorable Dr. C W W Kannangara Memorial Gold Medal – Best Overall Performance in the Faculty of Social Sciences and Languages

3. Prof. ADV De S Indrarathna Foundation – Gold Medal – Best Performance in Economics in the Department of Economics and Statistics

4. Mr. and Mrs. SJMHB Samarakoon Gold Medal – Best Performance in Monetary Economics and Applied Economics in the Department of Economics and Statistics

5. Most Ven. Balangoda Ananda Maitreya Memorial Gold Medal – Best Performance in the Faculty of Social Sciences and Languages

Web Design by Srilanka Muslims Web Team