5 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் அனைத்து மத்ரஸாக்களும் தடை செய்யப்படும் - சரத் வீரசேகர - Sri Lanka Muslim

5 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் அனைத்து மத்ரஸாக்களும் தடை செய்யப்படும் – சரத் வீரசேகர

Contributors

மதம் மற்றும் அராபி மொழியை மாத்திரம் போதிக்கும் 5 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மத்ரஸாக்களும் தடை செய்யப்படும். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கல்வி பயிலும் மத்ரஸாக்கள் தடை செய்யப்படாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரரேரணை மீதான விவாதம் (நேற்று 25) கலந்துகொண்டு உரையாற்றிய மரிக்கார் எம்.பிக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது, அனைத்து மத்ரஸா பாடசாலைகளுக்கும் தடை விதிக்கப்படுமென நான் ஒருபோதும் கூறவில்லை. எந்தவொரு நாட்டிலும் ஒரு தேசிய கல்விக் கொள்கையுள்ளது.

எமது நாட்டில் 5 – 16 வயது வரையான காலத்தில் தேசிய கல்வி கொள்கையின் கீழே அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும்.

5 – 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களுக்கு மதம் மற்றும் மொழியை மாத்திரம் கற்பிக்கும் மத்ரஸா பாடசாலைகள் இருந்தால் அவற்றை தடை செய்வோம் என்றே கூறினேன்.

அதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மதத்தை மாத்திரம் போதிக்கும் மத்ரஸா பாடசாலைகள் தேவையானளவு உள்ளன. அவற்றில் மௌலவியாக விரும்புபவர்கள் கல்வி கற்க முடியும்.

என்றாலும் 5 – 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் கற்கும் மதம், மற்றும் அராபி மொழியை மாத்திரம் போதிக்கும் பாடசாலைகள் தடை செய்யப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Web Design by Srilanka Muslims Web Team