“500 அதி செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள்” - Sri Lanka Muslim
Contributors

“500 அதி செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள்” என்பது வருடா வருடம் உலகின் செல்வாக்கு மிக்க முஸ்லிம்களை தரப்படுத்தும் ஒரு வரிசைப்படுத்தல்   முறைமையாகும்.

இந்த அறிக்கை ஜோர்தானில் தலைமைப்பீடத்தை கொண்டுள்ள இஸ்லாமிய சிந்தனைக்கான ரோயல் அஹ்லுல் பைத் நிறுவகம் என்னும் சர்வதேச இஸ்லாமிய அரச சார்பற்ற சுதந்திர அமைப்பினால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் அமெரிக்க ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அல் வலீத் பின் தலால் மையத்துடன்  இணைந்து வெளியிடப்படுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்! அந்த தரப்படுத்தலின் அடிப்படையில் முதல் 50 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில்    பெரும்பான்மையானோர் பாரம்பரிய முஸ்லிம்கள் அதாவது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சேர்ந்தவர் ஆவர்.

ஷியா, வஹாபி ஸலபி , இபாதி போன்ற வழிகெட்ட கூட்டங்கள் தமது கொள்கையை பரப்ப தம் செல்வங்கள், நேரங்களை செலவழித்து கடுமையாக பல்வேறு வேலைதிட்டங்களை செய்து வரும் இக்காலத்திலும் இன்னும் அல்லாஹ் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மற்றும் முஸ்லிம்களை கொண்டு இஸ்லாத்தை பாதுகாத்து வருகிறான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

கீழே உள்ள இந்த ஹதீஸை பாருங்கள்:

ஹஸ்ரத் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) எங்களுக்கு மத்தியில் நின்று பின்வருமாறு கூறினார்கள்:
“ஜாக்கிரதை! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எங்களுக்கு மத்தியில் நின்று இப்படி கூறினார்கள். ஜாக்கிரதை! உங்களுக்கு முன் வேதம் வழங்கப்பட்டவர்கள் (அதாவது யூதர்களும் கிறிஸ்தவர்களும்) 72 கூட்டங்களாக பிரிந்தனர். இந்த உம்மத்தினர் (அதாவது முஸ்லிம்கள்) 73 கூட்டங்களாக பிரிவர். அதில் 72 கூட்டத்தினர் நரகம் செல்வர். ஒரே ஒரு கூட்டம் மட்டுமே சுவர்க்கம் செல்வர். அவர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கும் கூட்டத்தினர்.”
நூல் – அபூதாவுத் 42 (கிதாபுஸ் ஸுன்னா) எண் – 4580

அல்லாஹ் கடைசிவரை நம் அனைவரையும் நேரான கொள்கையான அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ தௌஃபீக் செய்வானாக.

தகவல்.  Mail of Islam.

Web Design by Srilanka Muslims Web Team