500 பயனாளிகளுக்கு பேரீச்சம் பழங்களை வழங்கி வைக்க சமூக சேவைகள் அமைப்புக்களிடம் பேரீச்சம் பழங்கள் வழங்கி வைப்பு! - Sri Lanka Muslim

500 பயனாளிகளுக்கு பேரீச்சம் பழங்களை வழங்கி வைக்க சமூக சேவைகள் அமைப்புக்களிடம் பேரீச்சம் பழங்கள் வழங்கி வைப்பு!

Contributors

சம்மாந்துறை நிருபர்(ஐ.எல்.எம் நாஸிம்)
புனித ரமழான் மாத நோன்பினை முன்னிட்டு  சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 பள்ளிவாசல்களின் கீழுள்ள மஹல்லாவாசிகள் 500 பேருக்கு பேரிச்சம் பழங்கள் வழங்குவதற்காக சம்மாந்துறை சமூக சேவைகள் அமைப்புக்களிடம் பேரீச்சம் பழங்களை வழங்கி வைக்கும்  நிகழ்வு நேற்று (14) காலை ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட பகுப்பாய்வாளர் அஸ்மி யாசீன் தலைமையில் அவரின் இல்லத்தில்  இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அமைப்புக்களின் தலைவர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பேரீச்சம் பழங்களை பங்கிட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team