500 மில்லியன் கேட்ட ஹாபிஸ் நஸீர் » Sri Lanka Muslim

500 மில்லியன் கேட்ட ஹாபிஸ் நஸீர்

hafees

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவமதிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் ஏறாவூர் 2 ஆம் குறிச்சி,299,ஜி.எஸ்.வீதியைச் சேர்ந்த முஹம்மத் நஸீர் என்பவரிடம் 500 மில்லியன் ரூபா நஷ்டடு கோரப்பட்டுள்ளது.

குறித்த தொகையை வழங்கத் தவறின் வழக்குத் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஹம்மத் நஸீர் என்பவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரை தனது முகநூலில் அவமானப்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை இட்டமை தொடர்பிலேயே இந்த நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நஷ்டஈட்டுக் கோரிக்கையை முன்வைத்து ஹாபிஸ் நஸீர் அஹமத் வழக்கு ஒன்றைத் தொடர்வாரானால் அது அரசியல் ரீதியிலும் பல முக்கிய புள்ளிகளைச் சிக்கலுக்குள் உட்படுத்தும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

ஹாபிஸ் நஸீரினால் இதற்கு முன்னரும் பல வழக்குகள் தொடரப்பட்டமை, அதனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்புகள் தொடர்பில் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

hafee hafee.jpg2 hafee.jpg2.jpg3

Web Design by The Design Lanka