500 ஹஜ் பயணிகளிடம் ரூ. 2 1/2 கோடி மோசடி - இந்தியரை பிடிக்க சவுதி அரேபிய போலீசார் வலை - Sri Lanka Muslim

500 ஹஜ் பயணிகளிடம் ரூ. 2 1/2 கோடி மோசடி – இந்தியரை பிடிக்க சவுதி அரேபிய போலீசார் வலை

Contributors

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு ஹஜ் யாத்திரை சென்ற வெளிநாட்டினரை ஏமாற்றி 2 1/2 கோடி மோசடி செய்த இந்தியரை பிடிக்க சவுதி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஹஜ் யாத்திரைக்கு வரும்போது அவர்களுக்கு மினா நகரில் தங்கும் கூடாரங்கள் அமைத்து தருவதாகவும், இலவச உணவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி இந்தியாவை சேர்ந்த ஒருவர் சுமார் 500 பேரிடம் 15 லட்சம் சவுதி ரியால்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 2 1/2 கோடி ரூபாய்) மோசடி செய்து விட்டதாக ஜெட்டா போலீசாரிடம் பலர் புகார் அளித்துள்ளனர்.

மோசடி பேர்வழியின் பொய் வாக்குறுதியை நம்பி சவுதிக்கு சென்ற அவர்கள் தங்குவதற்கும், உண்பதற்கும் மிகவும் சிரமப்பட்டதாக கூறினர்.

இதனையடுத்து, செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்ய சவுதி போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகத்திலும் புகார் அளித்துள்ள போலீசார், ‘ஹஜ் பயணிகளிடம் மோசடி செய்த ஆசாமி மக்காவுக்கும் ஜெட்டாவுக்கும் இடையே எங்காவது பதுங்கி இருப்பான். எங்கள் பார்வையில் இருந்து தப்பி அவன் சவுதியை விட்டு வெளியேற முடியாது’ என்று தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team