5000 ரூபா வேண்டாம்; அப்பணத்தை கொவிட் நிதிக்கு எடுத்துக்கொள்ளுங்கள் - ஆசிரியர் சங்கம்..! - Sri Lanka Muslim

5000 ரூபா வேண்டாம்; அப்பணத்தை கொவிட் நிதிக்கு எடுத்துக்கொள்ளுங்கள் – ஆசிரியர் சங்கம்..!

Contributors

5000 ரூபா கொடுப்பனவு வேண்டாம் என்றும் அந்தப் பணத்தை கொவிட் நிதிக்கு எடுத்துக்கொள்ளுமாறும் ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு காரணமாக அரசாங்கம் எதிர்வரும் செப்டம்பர் , ஒக்டோபர் மாதங்களுக்கு 5000 ரூபா வழங்க தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு செலவிடப்படவுள்ள 2360 மில்லியன் ரூபாவை கொரோனா தடுப்பு நிதியத்துக்குப் பயன்படுத்துமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

5000 ரூபா பணத்திற்காக இந்தப் போராட்டத்தை நிறுத்த முடியாது. நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஒரே தடவையில் வழங்க வேண்டும் என்றும் 24 வருட கால உரிமையை நாங்கள் கேட்கிறோம் என அதன் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு வழங்கத் தீர்மானித்துள்ள கொடுப்பனவுகளை நான்கு பிரிவுகளாக வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

எங்களின் ஆர்ப்பாட்டத்தை 5000 ரூபாவுக்காக விட்டுக்கொடுக்க முடியாது என்றும் இன்றும் நாளையும் கலந்துரையாடி இந்தப் போராட்டத்தை புதிய வடிவில் முன்னெடுக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team