முகம் புதைத்த ஒரு இனமாக இல்லாமல் புதிய சோனக வரலாற்றை படைப்போம் - Sri Lanka Muslim

முகம் புதைத்த ஒரு இனமாக இல்லாமல் புதிய சோனக வரலாற்றை படைப்போம்

Contributors

upraisng

(Zuhair Ali (Ghafoori-UoC) –  Kinniya)
வரலாறு,பூர்வீகம்,அடிச்சுவடு,வழித்தோன்றல் இவை ஒரு சமூகத்தின் அல்லது மதத்தின் அடையாளமாக கணிக்கப்படும் அவ்வமயம் எமது இஸ்லாமிய வரலாறுகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றை நிரூபிக்க மக்கா,மதீனா,பாலஸ்தீன்,எகிப்து என பல சான்றுகள் மூலம் அவர்களது பூர்வீகத்தையும்,பாரம்பரிய வரலாறுகளையும் அறிந்து கொள்ள முடியும்.

எடுத்துக் காட்டாக, மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் கற்பாறையில் தனது தடியினால் அடித்து 12 நீர்ச் சுனைகளை ஏற்படுத்துமாறு கட்டளையிட்டான். ஏன் இந்த 12 நீர்ச் சுனை? ஒவ்வொரு சமூகமும் தனக்கே உரிய தனித்துவமான முறையில் நீரைப் பருக வேண்டும் என்பதற்காகவே அந்த 12 கூட்டதினருக்கும் அல்லாஹ் தனித் தனி நீர்ச் சுனைகளை ஏற்படுத்தினான்.

அல்குர்ஆன் வரலாறு சொல்லும் போது சமூகத்தைப் பற்றியும் அல்லது சமூகமாகவே வரலாற்றினைச் சொல்வதனைக் காண்கிறோம். சிலபோது அவற்றின் இடப் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றைக் குறிக்கும் அல்லது பெயர் குறிப்பிடாது சமூகமாக வாழ்ந்தனை மாத்திரம் குறிக்கும். அவற்றின் வாழ்வு முறை பற்றியும் அதன் நிகழ்வுகள், அழிவிற்கான காரணங்கள், சிலபோது அவற்றின் அழிவின் வகை பற்றியும் குறிப்பிடும்.

இனம் என்பது மொழிவாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலர் வாதிட்டாலும் இனத்துக்கான வரைவிலக்கணம் “ஒரு சமயத்தை பின்பற்றும் அல்லது குறிப்பிட்ட கலாச்சார தன்மைகளை கொண்டுள்ளோரும் கூட தனியான இனமாக வகைப்படுத்தப்படலாம் ” என்கிறது. ஆகவே சமய ரீதியில் முஸ்லிம்கள் என்போர் “தனியான இனம்” என்று வாதிடுவதற்கு இது வழிவகுக்கின்றது. ஆனால் உலகலாவிய ரீதியில் “முஸ்லிம்” என்பவர் ஒரு இனமாக பார்க்கப்படாமையால் இலங்கையில் மாத்திரம் அப்படி பார்க்கப்பட வேண்டும் என்பது பல சிக்கல்களை அரசியல் ரீதியில் உருவாக்கக் கூடியது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

சோனகர் எனும் பதமானது ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட “மூர்ஸ்” எனும் பதத்தின் நேரடி மொழி பெயர்ப்பாகவே போர்த்துக்கீயர் இந்நாட்டிற்குள் காலடி வைத்த காலம் முதல் பாவனையில் இருந்து வந்திருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மை, ஆனாலும் போர்த்துக்கீயருக்கு முந்திய கால இந்திய தமிழ் இலக்கியங்களும், வட இந்திய இலக்கியங்களின் தமிழ் மொழி பெயர்ப்புகளும் கூட “சோனகர்” எனும் வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறது.

மூர்ஸ் எனும் ஆங்கிலப் பதம் உலகின் பார்வையில் முக்கியத்துவம் பெறுவது ஸ்பெயினைத் தளமாகக் கொண்டு இயங்கிய இஸ்லாமிய ஆட்சிக்காலத்திலாகும் (கி.பி 711 – 1492 ).

அந்த வகையிலே சில வேளைகளில் பொதுவாக ஸ்பெயினில் வாழ்ந்த இஸ்லாமியர் அனைவரும் மூர்ஸ் எனும் வகைப்படுத்தலுக்குள்ளேயே வருகின்றனர் என்பது உண்மையாகினும், அடிப்படையில் அரேபியரும் மேலும் சில இனத்தவரும் கலந்தே மூர்ஸ் என அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என்பது உணரப்பட வேண்டும்.

மூர்ஸ் என உலகில் அறியப்படுவோரின் முன்னோர் அல்லது ஆரம்பத்தினைப் பற்றிக் குறிப்பிடும் பெரும்பாலான வரலாறு அவர்களை மேற்கு ஆபிரிக்கர்கள் என்று வரையறுக்கிறது. அதிலும் ஒரு படி மேலே செல்லும் சில ஆய்வாளர்கள் Berber (பேபர்) இன மக்களே இவர்கள் என்று நிறுவவும் செய்கிறார்கள்.

பன்னூற்றாண்டுகளுக்கு முன்னர் இத்தீவில் குடியேறிய அறபு வர்த்தகர்களின் வழித்தோன்றல்களே யாம் என இலங்கைச் சோனகர் வாழையடி வாழையாக நம்புகின்றனர்.ஒரு சிலர் விவாதத்துக்கு நாம்தான் ஆதம் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த சோனகர் அல்லது சுவனர் என்று எடுத்த்துக் கொண்டாலும் எம்மால் அவற்றை நிரூபிப்பதட்கான ஆதாரங்களோ,ஆக்கங்களோ இல்லை எனலாம்.

எனினும் நம்பத் தகுந்த ஐரோப்பிய எழுத்தாளர்களில் எழுத்தோவியங்களிலிருந்து நாம் விளக்கங்கள் தேடும் போது இலங்கையின் முதல் பிரதம நீதியரசரும் மாட்சிமை தங்கிய மன்னரின் ஆள்சபைத் தலைவருமான சேர் அலெக்சாந்தர் ஜோன்ஸ்டன் என்பாரின் கருத்துரை நம் முன் நிற்கின்றது.

”இத்தீவில் குடியேறிய முதல் முகம்மதியர் ஹாஷிம் சந்ததியினரான அறபிகளே எனவும் எட்டாம் நூற்றாண்டில் அவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து வந்தார்கள் எனவும் அன்னவரின் பரம்பரையினர் மத்தியில் வழக்கிலிருக்கும் மரபு வரலாறொன்று கூறுகின்றது என அவர் எடுத்துரைக்கின்றார்.”

இதே நேரம் கி.மு. 327-326 இடைப்பட்ட காலத்தில் மகா அலெக்ஸ்சந்தரின் கட்டளை பிரகாரம் இலங்கையின் புவி வரை படத்தைத் தந்த கிரேக்க மாலுமி ஓனொஸ் கிறிட்டோஸ்( Oneus Crites ) புத்தளத்திளும் அதைச் சுற்றியுள்ள அயல் பாகங்களுடன் நிலத்தொடர்புடைய பகுதிகளிலும் “சோனகர்”களின் குடியேற்றம், விஜயன் இலங்கைக்கு வர முன்னரே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிடுகின்றார். அதே நேரம் இந்த பொன்பரப்பி ஆற்றை “சோனாள் பொட்டமஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். “சோனாள்” என்பது “சோனகரையும்”, “பொட்டமஸ்” என்பது ஆற்றையும் குறிக்கும். இந்த பிரதேசம் தான் அதாவது அருவி ஆற்றுக்கும், மாயன் ஆறு என்றழைக்கப்படும் தெதுறு ஒயாவுக்கும், அதாவது இன்றைய சிலாபத்துக்கு வடக்கே பாயும் தெதூறு ஓயாவில் இருந்து மன்னாருக்கு தெற்காகவுள்ள குதிரைமலைக்கும் இடைப் பட்ட பிரதேசமே “சோனகம்” என்ற பிரதேசமாகவும் இந்த மாலுமி சித்தரிக்கின்றார். இந்த பகுதியை, அதாவது அரிப்பு, பொன்பரப்பு, புத்தளம் பிரதேசத்தை “Igona Civitas” ,அதாவது அறேபிய பழங்குடிகள் வாழ்ந்த இடமாகும் என J.R. Sinnathamby என்ற ஒரு ஆய்வாளரும் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு நம் சோனக வரலாறு பல இதிகாசங்களையும்,பரம்பரியங்களையும் நீண்ட வரலாற்றுடன் காண முடிந்தாலும் நாம் இன்று வரலாறு தொலைத்த சமூகமாக அல்லது இனமாக எம் வரலாற்று ஏட்டில் எழுத வெட்ரிடம் வைப்போமேயானால் நாளை நாம் கைசேதப்படும் நாளும் இல்லாமலில்லை.

நாம் இன்று பிரதேசவாதமும்,கொள்கைவாதமும் பேசியே நாமே நம் சோனக -முஸ்லிம் வரலாறுகளை காட்டிக் கொடுத்து,அளிக்க முட்படுகிறோம் ஏன் நாம் நமது பூர்வீக வரலாறு,வழித்தோன்றல்களை ஆராய்ந்து இனவாதம் பேசுபவர்களுக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாது.

ஆக,நாம் இதுவரை தம்மைப் பற்றி மத்திரமே சிந்திக்கும் நாம் ஏன் மாற்று மதங்களான பௌத்த,இந்து,கிறிஸ்துவ மதங்கள் எங்கு,எப்படி தோன்றின என்ற இதிகாச வரலாறுகளை நாம் ஆராய்வதில்லை

நமக்குள் ஒரு சில சில்லரைப் பிரச்சினைகலை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்போமைனால் நாளை நாம் வரலாறு மத்திரமல்ல நம் இனமும் அழிந்து விடக்கூடும் ஆக புத்திக் கூர்மையுடனும்,விவேகத்துடனும் இன்றைய சூழ்நிலையைக் கையால வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.

எம்மில் ஏத்தனை பேர் இஸ்லாமிய வரலாறு இலங்கை சோனக வரலாறு,அல்லது உலக முஸ்லிம்களின் வரலாறு போன்றவற்றில் தேர்ச்சி அல்லது பட்டம் பெற்றுருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் மிக மிக அரிதே ஆக நாம் இன்று ஆகக் குறைந்த பச்சம் நமது குடும்ப,கோத்திர,சொந்த ,தனிமனித வரலாறையேனும் தேடிப் படிக்க வேண்டும்.

ஆதலால் நாம் இன்று அவர்களது வரலாறு பூர்வீகம் இனம்,மதம் போன்ற இன்னோரன்ன வரலாறுகளை தேடிப் படித்து,பிடித்து நிரூபித்த்துக் காட்டுங்கள் ஏன் எனில் விஜயன் கூட இஸ்லாம் இலங்கையில் பரவிய பின்புதான் இங்கு வந்திருக்கிறான் என்று நம் வரலாறு சொல்கின்றது.

சோனக வரலாற்றை தொலைத்த சமூகமாக அல்லது இனமாக ஆகவிடாமல் நாம் ஒன்று சேர்ந்து ஒரு வரலாறு படைப்போம் …!

 

 

Web Design by Srilanka Muslims Web Team