6 பெண்களின் மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை - Sri Lanka Muslim

6 பெண்களின் மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை

Contributors

மருதானை பொலிஸ் பிரிவில் தற்காலிக விடுதி (புஸ்பா லொட்ஜ்) என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று (31) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற இருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் பன்வில, வௌ்ளவத்தை, ஆட்டுப்பெட்டித்தெரு, மோதரவீதி, களனி, வவுனியா மற்றும் தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team