6-வது வீரராக களம் இறங்கி 9 சதங்கள் அடித்து பாக். வீரர் ஆசாத் ஷபிக் சாதனை » Sri Lanka Muslim

6-வது வீரராக களம் இறங்கி 9 சதங்கள் அடித்து பாக். வீரர் ஆசாத் ஷபிக் சாதனை

so-jpg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் 6-வது நபராக களம் இறங்கி 9 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஆசாத் ஷபிக் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.

4-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்ததுள்ளது. பாகிஸ்தான் அணியின் 6-வது வீரராக களம் இறங்கிய ஆசாத் ஷபிக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இந்த சதம் மூலம் 6-வது நபராக களம் இறங்கி அதிக சதங்கள் (9) அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கேரி சோபர்ஸ் 8 சதங்கள் அடித்ததே அதிகபட்ச சதமாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சந்தர்பால், டோனி கிரேக், ரிக்கி பாண்டிங், திலகரத்னே ஆகியோர் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.

so

Web Design by The Design Lanka