7 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் - அஜித் ரோஹண தகவல்..! - Sri Lanka Muslim

7 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் – அஜித் ரோஹண தகவல்..!

Contributors

எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று காலை தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team