7.8 மில்லியன் எத்தியோப்பியர்களின் கதி என்ன? » Sri Lanka Muslim

7.8 மில்லியன் எத்தியோப்பியர்களின் கதி என்ன?

ethi

Contributors
author image

BBC

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 7.8 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அவசர உணவு உதவி, இந்த மாதத்தின் இறுதியில் காலியாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்திருக்கிறது,

மாடுபடத்தின் காப்புரிமைREUTERS

உதவி குழுக்களும், எத்தியோப்பிய அரசும் உதவி அளிக்க வேண்டுகோள் விடுத்துவரும் நிலையில், உலகளவில் நிகழ்ந்து வருகின்ற பிற பிரச்சனைகளால் உதவி வழங்கும் நாடுகள் சோர்வடைந்துள்ளது என்கிற அச்சத்தை கொண்டுள்ளன.

தென் சூடானில் பஞ்சம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வட கிழக்கு நைஜீரியா, ஏமன் மற்றும் சோமாலியாவில் பஞ்சம் ஏற்படலாம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து மழை பொய்யாத காரணத்தாலும் எத்தியோப்பியா அல்லலுற்று வருகிறது.

முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்களை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை விட, இந்த ஆண்டு நல்ல முறையில் கையாண்டாலும், இந்த நாட்டின் அரசால் மட்டுமே அனைத்தையும் செய்வதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுகிறது.

விலங்குகள் இறப்புபடத்தின் காப்புரிமைOEL ROBINE/AFP/GETTY IMAGES

கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகமாக 281 மில்லியன் டாலர்களை அரசு ஒதுக்கினாலும், மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து செய்ய முடியமல் திணறுகிறது.

இதனால், எத்தியோப்பியா மோசமான நிலையில் விடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டத்தின் ஜான் ஐலியேஃப் தெரிவித்திருக்கிறார்.

“ஜூன் மாதம் முடியும்போது, உணவு உதவி பொருட்கள் அனைத்து காலியாகும்” என்று வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனால், மனிதநேய உணவு உதவி தேவைப்படும் 7.8 மில்லியன் மக்களுக்கு ஜூன் இறுதிக்குள் திடீரென உணவு இல்லாமல் போகும் என்று அவர் கூறியுள்ளார்.

சேவ் த சில்ரன் அமைப்பின் ஜான் கிரஹாமும் இதனையே தெரிவித்திருக்கிறார்.

இந்த உணவு காலியானவுடன் என்ன நடக்குமென தெரியாது. அடிப்படை உணவு இல்லாமல் போவதால், மக்களுக்கு, எந்த உணவும் கிடைக்காததால் கடும் ஊட்டச்சத்து குறைவு ஏற்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த குழந்தைகளுக்கு கடும் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவதால் மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka