71 எம்.பிக்களுக்கு புதிய வீடுகள்! - Sri Lanka Muslim
Contributors

அண்மையில் நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர்களுக்கு விரைவாக புதிய வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் தனித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நாடாளுமன்றம் தலையிட்டு அவர்களுக்கு விரைவில் வீடுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team