முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் .. ! - Sri Lanka Muslim

முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் .. !

Contributors

அந்தப்பதிவானது இழிவான அரசியல் ஆதாயம் தேடும் குரூரமான அரசியல் நோக்கம் கொண்ட பொய்யான பதிவு என்பதனை நான் அரசியலுக்கு அப்பால் எழுதியிருந்தேன்.

அதன்பின்னர் தங்கள் மீண்டும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ ஏ எம் எம் நௌஷாத் அவர்களைத்  துரோகியாகவும் அவரது நிலைப்பாட்டை சரிகாண்பவர்களும் துரோகிகளே எனவும்  ஒரு பதிவை இட்டுள்ளீர்கள்…

என்  அன்புக்கும்  மரியாதைக்கும் உரியவரே..!

நான் மட்டுமே  சரி ..

நான் மட்டுமே தகுதி….

என்னால் மட்டுமே எல்லாம் முடியும்….

என்று கடந்த 20  வருடகாலமாக இந்த மண்ணில் அதிகாரத்திலிருந்து வரும் உங்களுடைய சாதனைகளை நானும் இந்த மக்களும் நன்றாகவே அறிந்துள்ளோம்.

வரலாறு மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களுக்கும் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் அவர்களுக்கும் மர்ஹூம் முஹைதீன் அவர்களுக்கும் தந்துள்ள இடத்தை உங்களுக்கும் தரவேண்டும் என ஆலாய்ப்பறந்தவர்களில்  நான் முதன்மையானவன்  என்பதை நீங்கள் மறுக்கலாம்…உங்கள் மனசாட்சி மறுக்காது…

நான் சகோதரர் நௌஷாத் அவர்களை குறித்த ஜனாஸா அடக்கும் விடயத்தில் சரிகாண்பதால் உங்களுக்குத் துரோகியாகத் தெரியலாம்…

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பொழுது உங்களுக்குத் தியாகியாகத் தெரிந்த அவர் இப்பொழுது துரோகியாகத் தெரியலாம்..

2004ம் ஆண்டு அவரே உங்களைத் தவிசாளராக ஆக்கினார் என்பதனையும்…

2015 ம்  ஆண்டு அவர் போட்டியிடாமல் ஒதுங்கியதால்தான் நீங்கள் பாராளுமன்றம் போனீர்கள் என்பதையும் இலகுவாக நீங்கள் மறந்திருக்கலாம்….

இங்கு நம்மை நாமே சுயமாக நல்லவன் வல்லவன் சமூகப்போராளி என்று  மார்தட்டிக்கொள்வதில் இந்த சமூகத்துக்கு எந்த நன்மையுமில்லை.

ஆதலால் உங்களுக்கு பகிரங்கமாக ஒரு விண்ணப்பத்தை பணிவுடனும் மரியாதையுடனும்   முன்வைக்கின்றேன்…..

நீங்கள்  மாகாணசபை உறுப்பினராக இருந்த பொழுது மாகாணசபைகள் அதிகாரத்தினை இல்லாமலாக்கும்  திவிநெகும  சட்டமூலத்துக்கு கட்சியின் மற்றும் தலைமையின் உத்தரவை மீறி அந்தச் சட்டத்துக்கு  வாக்களித்த சமூகத் துரோகத்துக்கு  கட்சியின் தலைவர் அவ்வாறு வாக்களித்த மாகாண சபையின் உறுப்பினரான உங்களுக்கும்   மற்றயவர்களுக்கும்   பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என சம்மாந்துறை ஷியா சந்தியில் வைத்து அறைகூவல்  விடுத்த அந்த அரசியல் சமூகத் துரோகம்  குறித்தும்….

கடந்த பாராளுமன்றத்தின் தேசிய  பாதுகாப்புக் குறித்த பாராளுமன்றக் குழுவின்  உறுப்பினராக இருந்து இந்த  சமூகத்தின் பல விடயங்களை தேசிய பாதுகாப்புக்கு எதிரான விடையங்களாகக் காண்பித்து அவைகளை மாற்றீடு செய்யுங்கள் என  சிபாரிசு எதிராகச்  செய்த , இன்று அந்தச்  சிபாரிசுகள் அடிப்படையில் முன்னெடுக்கப்படும்  நமது  சமூகத்தின் பல செயற்படுகளுக்கு எதிரான விடயங்களுக்கு  காரணமாக இருந்த உங்களது சமூகத் துரோகம் குறித்தும்….

பகிரங்கமாக பொது வெளியில்  என்னுடன் உரையாட முன்வருமாறு உங்களிடம் நான் இந்தப் பொதுவெளியில் அழைப்பு விடுக்கிறேன்….

நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள்….

யார் சமூகத் துரோகி என்று சமூகம் விரைவில் அடையாளப்படுத்தும் என்று…

அதற்க்கு அதிக நாட்களை இந்த சமூகத்துக்கு நாம் கொடுக்கத்  தேவையில்லை…

மக்கள் மன்றின் முன் இருவரும் தோன்றுவோம்….

உரையாடுவோம்….

மக்கள் யார் சமூகத் துரோகி என்று தீர்மானிப்பார்கள்…

உங்களது பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்….

உங்களுக்கு ஒரு தயக்கம் சிலவேளைகளில்  இருக்கலாம்…

ரணூஸ் முஹம்மட் இஸ்மாயில்

Web Design by Srilanka Muslims Web Team