A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 23 நாட்கள் தாமதம்! - Sri Lanka Muslim

A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 23 நாட்கள் தாமதம்!

Contributors

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் சுமார் 23 நாட்கள் வரை தாமதமடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டாலும் இதுவரை போதுமான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக இணைந்துகொள்ளாத காரணத்தினால் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை உரிய முறையில் ஆரம்பிக்க முடியாதுள்ளதாக என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் மேற்பார்வை செயற்பாடுகளுக்காக இணைந்துகொள்ளாமை தொடர்ந்தும் இந்த நடவடிக்கை தாமதமடைய காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team