ACMCயை பலப்படுத்துவது காலத்தின் தேவையா? » Sri Lanka Muslim

ACMCயை பலப்படுத்துவது காலத்தின் தேவையா?

risha

Contributors
author image

Irshad Rahumadullah

தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா


கடந்த 10 ஆம் திகதி நடை பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது சிறுபான்மை சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும்,அதற்கு வாக்களித்த மக்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.இந்த தேர்தல் ஏனை ய தேர்களை போன்றல்லாது வட்டார முறையில் அமைந்திருந்த போதும்,ஒவ்வொரு கட்சியும் தாபம் ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி நிலைக்கு உள்ளாகியுள்ளது.இந்த வகையில் இந்த நாட்டில் பலம் பெரும் கட்சி என்று கூறும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாக இருந்தால் என்ன ஜக்கிய தேசிய கட்சி என்று இருந்தால் என்ன  அந்த கட்சிகளுக்கும் இந்த தேர்தல் முடிவு தம்மை மீள் பரிசீனை செய்து கொள்ள தேவையான சந்தர்ப்பத்தை தோற்றுவித்துள்ளது என்பது யதார்த்தம்.

தேர்தலுக்கு முன்னர் மேடைகளில் கட்சிகள் கூறியதை வாக்காளர்கள் மறந்துவிடக் கூடாது,அப்போதைய பிரசார மேடைகளில் பேசியவர்களின் பேச்சுக்கள் என்பது இன்னும் 5 வருடத்திற்கு மக்களின் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும் என்பது எமது எடுகோளாகும்,சில மேடைப் பேச்சுக்கள் என்பது இனவாதம்,பிரதேசவாதம் என்பவைகளை முதலீடாக கொண்டதாகும்.அப்படிப்பட்ட கட்சிகள் அவர்களது நிகழ்ச்சி நிரலை அந்த லாபத்தினை மையப்படுத்தி முன்னெடுப்பார்கள்,அதற்கு மாறாக உள்ள கட்சிகள் சமூகத்தினதும்,மாவட்டத்தினதும்,தேசிய ஒருமைப்பாட்டுக்குமான கட்சியாக பார்க்க முடியும்.

இப்படியான சூழ் நிலையில் நடை பெற்று முடிந்த தேர்தலில் குறிப்பாக இன்று பலராலும் பேசப்படும் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை பார்க்கமுடிகின்றது.இந்த கட்சியானது 15 மாவட்டங்களில் வேறு பிரதான கட்சியுடன்,இணைந்தும்,தமது சொந்த மயில் சின்னத்தில் இணைந்தும்அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பாகவும் போட்டியி்ட்டு தமது தளத்தை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த வரிசையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேர்ந்து போட்டியிட்ட பகுதிகளில் கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் எடுத்த வாக்குகளை விட அதிகரித்த வாக்குகளை பெற்றுள்ளதுடன்,30க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையினை  ஏற்படுத்தியுள்ளதை இதன் போது காணமுடிகின்றது.குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள்,நல்லாட்சியினை ஏற்படுத்த வழங்கிய ஒத்துழைப்பு,அதன்  பிற்பாடு பாராளுமன்ற தேர்தலிலும்,அதனது பின்னர் அம்பாறையில்  மேற்கொண்ட அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட இதர சேவைகள் மக்கள் மத்தியில் நமபகத்தன்மையினை உறுதிப்படுத்திவிட்டது.

மாற்றமாக ஏனைய கட்சிகள்  காலத்துக்கு காலம் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புதிய வாக்குறுதிகளை அளித்து பழைய வாக்குறுதிகளை மறைக்கு வேளையினை நீண்டகாலமாக செய்து வந்தமையினால் மக்கள் அந்த அரசியல்வாதிகளை ஓரங்க ஆரம்பித்த நிலையில் கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்களின் நேசத்திற்கு உள்ளான நிலையில்,சகோதரர் ஹஸனலி தலைமையிலான அரசியல் தலைமைகளின் பிரவேசம் இன்னும் இந்த மக்கள் மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் துாய பணிக்கு வலுச்சேர்த்தது என்பதும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படல் வேண்டும்.எதிர்காலத் தேர்தல் என்பது இவ்வாறான கூட்டின் மூலம்முன்னெடுக்கப்படுகின்ற போது சமூகத்தின் பலத்துக்கு பாதுகாப்பும்,பலவீனத்திற்கு முன்னெச்சரிக்கையாக அமையும் என்ற முடிவை இந்த தேர்தலின் போது எம்மால் கூர்ந்து அவதானிக்க முடிவதுடன்,அதற்கான சிறந்த காய் நகர்த்தல்களை செய்யும் பாதையினையும் திறந்துவிட்டுள்ளதை இநத தேர்தல் தேர்தல் முடிவு காட்டி நிற்கின்றது.

இப்படியான நிலையில் குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதி நிதித்துவம் செய்யும் வன்னி மாவட்ட தேர்தல் முடிவு இந்த நாட்டு அரசியலிலம்,அரசியல் கட்சிகள் மக்களிடத்திலும் புத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி என்று சூட்டப்பட்ட மகுடத்தினை மக்கள் அங்கீகரித்துள்ளார்கள்.வடக்கில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட போலி பிரசாரத்திற்கு மக்கள் சிறந்த பதிலை கொடுத்துள்ளார்கள் .

அது மட்டுமல்ல குறிப்பாக சிறுபான்மை கட்சியின் தேசிய தலைமைத்துவம் என்று கூறிக்கொண்டு பித்தலாட்டக்காரர்களை வைத்து அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ள பகற்கனவு கண்ட கட்சியின் தேர்தல் முடிவு என்பது முசலி மக்களும்,மன்னார் மாவட்ட மக்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் மீது கொண்டுள்ள விஸ்வாதத்தை தெளிவாக புடம் போட்டு காட்டியுள்ளது.இந்த பாடத்தை அந்த கட்சி கற்க தவரும் பட்சத்தில் அடுத்த மாகாண சபை தேர்தலில் படும் சிதைவினை சந்திக்க நேரிடும் என்ற கணிப்பீட்டை முன்கூட்டியே இன்ஷா அல்லாஹ் எதிர்வு கூறலாக சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.

மன்னார் மாவட்டத்தினை எடுத்து கொண்டால் தமிழர்களும்,முஸ்லிம்களும்,சிங்களவர்களும் வாழும் மாவட்டமாகும்.இந்த மாவட்ட மக்கள் மூன்று பொதுத்தேர்களிலும்,மாகாண சபைத் தேர்தலிலும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் கேளமிறக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.அப்படிப்பட்ட நிலையில் இந்த மக்களுக்கு அமைச்சரினால் கொண்டுவரப்படும் அபிவிருத்திகள் தமது எதிர்கால அரசியல் இருப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் என்பதால்,இந்த உள்ளுராட்சி தேர்தலை பல கட்சிகள் பிச்சைக்காரன் தனது உடம்பில் உள்ள புன்னை காட்டி யாசகம் பெறுவது போன்று தொடர்ந்தேச்சையான இனவாதத்தையும்,தமிழ்,முஸ்லிம் பிரிவினைக்கான நச்சு விதைகளை விதைத்த போதும்,இம்மக்கள் ஒன்றுபட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

ஜக்கிய தேசிய கட்சி கூட்டான  ஜக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களித்து வரலாறு காணாத வெற்றியினை பெற்றுக்கொடுத்துள்ளதில் இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் எந்த அளவுக்கு மக்களுடன் நெருங்கிய தமது நேர்மையான பணியினை செய்துவருகின்றார் என்பதை கட்டியம் கூறி நிற்கின்றது.மன்னார் நகர சபையில் கடந்த உள்ளுராட்சியில் 1 உறுப்பினர் மட்டும் கொண்டிருந்த  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இம்முறை ஆசனங்களை தனதாக்கி கொண்டுள்ளது.அதே போல் முசலி பிரதேச சபையில் 7 ஆசனங்களையும்,நானாட்டான் பிரதேச சபையில் 5 ஆசனங்களயும்,மாந்தை மேற்கு பிரதேச சபையில் 11 ஆசனங்களையும்,மன்னார் பிரதேச சபையில் 7 ஆசனங்களையும் பெற்றுள்ளது.இதன் மூலம் மக்கள் தெளிவான ஆணையினை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு வழங்கியுள்ளார்கள் என்பதை புலனாகின்றது.

அதே போல் வவுனியாவிலும்,முல்லைத்தீவிலும் அதிகமான உறுப்பினர்களை பெற்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அணி பல சபைகளின் ஆட்சியினை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.இது அமைச்சர் றிசாத் பதியுதீனின் கடந்த கால நேரமையான செயற்பாடு மீது மக்கள் கொண்டுள்ள அப்பழுக்கற்ற நம்பிக்கையின் பிரதி பலனாகும்.அதே  போல் திருகோணமலை மாவட்டத்தில் தனித்து மயில் சின்னத்தில் போட்டியிட்டு போதுமான ஆசனங்களை தனதாக்கியதுடன்,ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உதவியினை நாவேண்டிய நிலையினை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் அநுராதபுரம் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  குறுகிய காலத்தில் 4 ஆசனங்களை பெற்றுள்ளது.அதே போல் நீர்கொழும்பு மாநாகர சபை,பேருவளை பிரதேச சபை,களுத்துறை நகர சபை,கொழும்பு மாநகர,யாழ்ப்பாணம் நகர சபை,கிளிநொச்சி ,கண்டி மாவட்டத்தில் உள்ள பல  சபைகளிலும் ஆசனங்களை பெற்றுள்ளது.

அதே வேளை புத்தளம் நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு சமமான 7 ஆசனங்களை பெற்றுள்ளது.அதே வேளை இங்கும் ஏனைய கட்சிகளின் தயவின்றி நிலையான ஆட்சியினை இரு தரப்பினராலும் ஏற்படுத்த முடியாத நிலை காணப்பட்ட போதும்,புத்தளம் நகர சபையில் பலமான எதிர்கட்சி ஒன்றினை  காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.அதே வேளை கல்பிட்டி பிரதேச சபையிலும் ,வண்ணாத்தவில்லு பிரதேச சபை மற்றும் புத்தளம் பிரதேச சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒட்டு மொத்தமாக  அகில இலங்கை மக்கள் 160 ஆசனங்களை பெற்று இந்த நாட்டு அரசியலில் தீர்க்கமான வகிப்பகத்தை வகிக்கும் அளவுக்கு பேரம் பேசும் சக்தியினை பெற்றுள்ளது.இது தனிமனத ஆளுமை ஊடாக சமூகம் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே பார்க்க வேண்டியுள்ளது.இதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த நாட்டு சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் அபிமானத்துக்கும்,உரிமைக்குமான கட்சியாகவும்,கட்சியின் தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளமைக்கான போதுமான ஆதரமாக  இந்த தேர்தலின் முடிவு அமைந்துள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத இயக்கத்திற்கு பின்னால் செல்வதை விட அமைதி பேனுவது சிறந்தது,மாற்றமாக மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க தம்மை தியாகம் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் எனபதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

 

Web Design by The Design Lanka