(Breaking News) கண்டியில் பள்ளிவாசலை உடைத்து திருட முயற்சி - Sri Lanka Muslim

(Breaking News) கண்டியில் பள்ளிவாசலை உடைத்து திருட முயற்சி

Contributors

-Hafees-
கண்டி மடவளையிலுள்ள பஸார் ஜும்மா பள்ளி வாசலை உடைத்து திருட மேற்கொண்ட முயற்சி பலனற்றுப்போயுள்ளது.
இன்று வெள்ளிக் கிழமை அதிகாலை வேளை ஜாமியுல் கைராத் பள்ளிவாசல் நிர்வாக அறைக்குள் நிர்வாகத்தினர் பிரவேசித்தபோது அவ் அறை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.

 
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே நிர்வாக அறை உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் என்பன திருடப்பட்டிருந்தன.

 
இதனை அடுத்து நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கையாக பணம் மற்றும் பொருட்கள் வைப்பதனை கைவிட்டு அவற்றை பாதுகாப்பான இடங்களில் வைத்ததனால் பாரிய கொள்ளை முயற்சியொன்று தோல்வி அடைந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிர்வாக சபைச் செயலளார் கருத்துத் தெரிவிக்கையில்,

 

அண்மை காலமாக நாடு முழுவதும் முஸ்லிம்களது மட்டுமல்லாது ஏனைய மதத்தைச் சேர்ந்த வர்களது சமய நிறுவனங்கள் உடைக்கப் படுவதும் திருட்டுக்களை மேற்கொள்வதும் வழமையாகி விட்டது.

 
எனவே முஸ்லிம்களாகிய சகலரும் சகல மதங்களைச் சேர்ந்த மதஸ்தாபனங்களையும் இறைவன் பாதுகாத்துத் தரவேண்டும் எனப் பிராத்திப்பதோடு பொது மக்கள் விழிப்பாகவும் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.(vk)

Web Design by Srilanka Muslims Web Team