COVID 19 பற்றி ஜனாதிபதியின் அறிக்கை..! » Sri Lanka Muslim

COVID 19 பற்றி ஜனாதிபதியின் அறிக்கை..!

Contributors
author image

Editorial Team

COVID 19 தொற்றுநோய் உலகெங்கும் பரவி அச்சுறுத்தியபடி இருந்த ஒரு நேரத்தில் –

வலுவான நாடாக நாங்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நின்று, அதனை தோற்கடித்து வெற்றி கண்டிருந்தோம்.

ஆனால், இப்போது – எங்கோ இழைக்கப்பட்ட ஒர் அலட்சியமான தவறின் காரணமாக – COVID 19 மீண்டும் நமது நாட்டில் பரவத் தொடங்கி விட்டது.

முன்னரைப் போலவே, இந்த முறையும் – இந்த தொற்றுநோயிலிருந்து எம்மைக் காப்பாற்ற – எமது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஏனைய சேவைத் துறையினர் சிறந்த நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் – சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை, அலட்சியப்படுத்தாமல் – நேர்த்தியாகவும் – கச்சிதமாகவும் பின்பற்றுவது மட்டுமல்லாமல் –

மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் கபட நோக்கத்துடன் பல்வேறுபட்ட குழுக்களாலும் பரப்பப்படும் ஏமாற்றுப் பொய் செய்திகளால் ஆட்கொள்ளப்பட்டுவிடாமல் –

அதிகாரபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்தும் ஜனாதிபதி செயலகத்திலிருந்தும் வெளியிடப்பட்டு,

பதிவு செய்யப்பட்ட வெகுசன ஊடகங்களினால் உங்களுக்குத் தரப்படும் தகவல்களை மட்டுமே உண்மை என எடுத்து,

அதற்கேற்ப செயற்படுமாறு நாட்டு மக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

#கோட்டாபயராஜபக்‌ஷ #gotabayarajapaksa #GR

Web Design by The Design Lanka