G.C.E.O/L பரீட்­சைக்கு முகத்திரை அணிந்து பரீட்சை எழுத தடையில்லை -பரீட்­சைகள் ஆணை­யாளர் - Sri Lanka Muslim

G.C.E.O/L பரீட்­சைக்கு முகத்திரை அணிந்து பரீட்சை எழுத தடையில்லை -பரீட்­சைகள் ஆணை­யாளர்

Contributors

நடை­பெற்று வரும் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்கு  முஸ்லிம் பரீட்­சார்த்­திகள் நிகாப் அணிந்து தோற்­று­வதால் எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை எனவும் ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த அனைத்து பரீட்சை நிலை­யங்­க­ளிலும் பெண் கண்­கா­ணிப்­பா­ளர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் டப்­ளியூ.எம்.என்.ஜே.புஷ்­ப­கு­மார விடி­வெள்­ளிக்கு தெரி­வித்தார்.
முஸ்லிம் மாண­விகள் முகத்­திரை அணிந்து பரீட்­சைக்கு தோற்­று­வதால் பாது­காப்பு தொடர்­பிலோ அல்­லது பரீட்சை மோசடி தொடர்­பிலோ எந்த பிரச்­சி­னையும் இல்லை என அவர் மேலும் குறிப்­பிட்டார். இம்­முறை எந்­த­வித பிரச்­சி­னையும் இன்றி சாத­ராண தர பரீட்­சைகள் இடம்­பெ­று­வ­தாக குறிப்­பிட்ட அவர் முகத்­திரை அணிந்து பரீட்­சார்த்­திகள் பரீட்­சைக்கு தோற்­று­வதால் பரீட்சை முறைகே­டுகள் இடம்­பெ­றலாம் என்ற சிலரின் குற்­றச்­சாட்­டுக்­களை முற்­றாக நிரா­க­ரித்தார்.
கடந்த 10 ஆம் திகதி ஆரம்­ப­மான சாதா­ரண தரப் பரீட்சை, வரலாற்றில் அதிக பரீட்­சார்த்­திகள் தோற்றும் சாதா­ரண தர பரீட்­சை­யாக பதி­வா­கி­யுள்­ளது. இந்த பரீட்­சையில் 5 இலட்­சத்து 78 ஆயி­ரத்து 140 மாண­வர்கள் தோற்­று­கின்­றனர். அதற்­காக நாட­ளா­விய ரீதியில் 4312 பரீட்சை நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த அனைத்து பரீட்சை நிலை­யங்­க­ளிலும் பெண் கண்­கா­ணிப்­பா­ளர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இதனால் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதில் எவ்வித சிரமும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.(vidivel)

Web Design by Srilanka Muslims Web Team