GPS வசதியை மீனவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தால் ஹரீஸ் மாலை தீவிற்கு சென்றிருக்க தேவையில்லை » Sri Lanka Muslim

GPS வசதியை மீனவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருந்தால் ஹரீஸ் மாலை தீவிற்கு சென்றிருக்க தேவையில்லை

fi66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(இப்றாஹிம் மன்சூர்)


அண்மையில் கல்முனையில் இருந்து மீன் பிடிக்கச் சென்றவர்களில் ஆறு பேர் காணாமல் போய் இருந்தனர். இவர்களில் இருவரை மாலை தீவு கடற்படையினர் மீட்டுள்ள போதும் தாங்கள் தான் மீட்டது போன்று சில அரசியல் வாதிகள் கூவித் திரிகின்றனர்.

மீன் பிடிக்க சென்ற நபர்களிடம் ஜீ.பி.எஸ் வசதியும் அதனை பயன்படுத்தக் கூடிய முறை பற்றிய அறிவும் வழங்கப்பட்டிருந்தால் இப் பிரச்சினை எழுந்திருக்காது.

மீனவர்கள் நிர்க்கதியான நிலையின் போது,அதனை அவர்கள் மீன் பிடித் திணைக்களத்திற்கு அறிவிக்கும் பட்சத்தில் குறித்த இடத்தை அறிந்து உடனே கடற்படை விரையும். கல்முனையில் இருந்து மீன் பிடிக்கச் செல்கின்றவர்களில் அதிகமானவர்கள் இவ்வசதி இல்லாமலேயே மீன் பிடிக்கச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான மக்கள் தேவைகளை அறிந்து செய்து கொடுக்க வேண்டிய கடமை அரசியல் வாதிகளிடமே உள்ளது. அப்படி செய்து கொடுத்திருந்தால் இன்று பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலை தீவிற்கு சென்றிருக்கத் தேவையில்லை.கல்முனை முஸ்லிம் காங்கிரசின் கோட்டை. இதன் காரணமாக கல்முனையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகும் போகும் அதற்கான முழுப் பொறுப்பையும் முஸ்லிம் காங்கிரசே ஏற்க வேண்டும்.

கல்முனையின் அரசியல் பிரதிநிதியாகவுள்ள பிரதி அமைச்சர் ஹரீசிற்கும் இதன் மிகப் பெரும் பங்குண்டு. எனவே,அவர் மாலை தீவு சென்றது அவர்களது மக்கள் சிந்தனையற்றதன் காரணமாகவே என்பதுவே உண்மை.

அவர்களை மாலை தீவு சென்று அழைத்து வருவது ஒரு போதும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வாகாது. இதன் பிறகாவது மீனவர்களுக்குரிய ஜீ.பீ.எஸ் வசதியும் அதனை பயன்படுத்தும் முறை பற்றிய தெளிவும் ஊட்டப்படல் வேண்டும்.

Web Design by The Design Lanka