KPL T20 சாம்பியனானது ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகம் - Sri Lanka Muslim

KPL T20 சாம்பியனானது ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகம்

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஒரு மாதகாலமாக வாழைச்சேனை நியூஸ்ட்டார் விளையாட்டு கழகம் நாடத்தி வந்த KPL T20 எனப்படும் அணிக்கு 20 ஓவர்களை கொண்ட சுற்றுப்போட்டியில் கல்குடாவில் உள்ள பிரபல்யம் வாய்ந்த 24 கழகங்கள் பங்குபற்றின. இதில் இறுதிப்போட்டிக்கு ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகமும், வாழைச்சேனை நியூஸ்ஸ்ட்டார் விளையாட்டு கழகமும் தகுதி பெற்று இன்று இறுதிப் போட்டியானது ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் (நேற்று திங்கட் கிழமை08.09.2014) இடம்பெற்றது.

 

கல்குடா பிரதேசத்தின் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பெரும் கோலாகலமாக இடம் பெற்ற இவ்விறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வாழைச்சேனை நியூஸ்ட்டார் விளையாட்டு கழகம் 132 ஓட்டங்களை வெற்றி இலக்காக வளர்பிறை விளையாட்டு கழகத்துக்கு நிர்னயித்தது. ஆரம்பமுதலே வியக்கத்தக்க அதிரடியில் இறங்கிய வளர்பிறை விளையாட்டு கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஆறு ஓவர்களில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இலகுவான வெற்றியை வளர்பிறை விளையாட்டு கழகம் பெறுவதற்கு அடித்தளமிட்டனர்.இறுதியில் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகம் மிகவும் இலேசான முறையில் 2014ம் ஆண்டுக்கான நியூஸ்ட்டார் விளையாட்டு கழகத்தினரின் KPL T20 சாம்பியன் கின்னத்தை கைப்பற்றினர்.

 

இறுதி போட்டியில் பிரதம அதீதியாக முன்னால் அமைச்சரும், மாகான சபை உறுப்பினருமான MSS.அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டதுடன், கெளரவ அதீதிகளாக கோளைபற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஹமீட் அவர்களும் பிரதேச சபை உறுப்பினர் IT.அஸ்மி அவர்களும், கோறளைப்பற்று மேற்கு திட்டமிடல் அதிகாரி. றுவைத் அவர்களும் கலந்து கொண்டு வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக்கின்னங்களையும் பரிசில்களையும் வழக்கி வைத்தனர். மேலும் அன்மைக்காலமாக ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகத்தினர் MAC.ஜிஃப்ரி கரீம் அதிபர் அவர்களின் தலைப்பொறுப்பின் கீழ் கிரிக்கட் விளையாட்டு துறையில் மட்டகளப்பு மாவட்டத்தில் முன்னோக்கி செல்லவதானது பொது மக்களினதும்,சகல கழகங்களினதும் கவனத்தில் கொள்ளதக்க விடயமாக காணப்படுகின்றது.

 
13

 

15

 

11

 

 

 

 

 

12

 

14

 

Web Design by Srilanka Muslims Web Team