LED மின் குமிழிகளை தயாரிப்பது தொடர்பான செயல்முறை பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்! - Sri Lanka Muslim

LED மின் குமிழிகளை தயாரிப்பது தொடர்பான செயல்முறை பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

Contributors
author image

Editorial Team

ED மின் குமிழிகளை தயாரிப்பது தொடர்பான செயல்முறை பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் தற்சமயம் கோரப்படுகின்றன.பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழில் பயிற்சி அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு மாவட்ட அலுவலகம் இந்த பயிற்சி நெறியை நடத்தவுள்ளது.

 

இந்த பயிற்சி நெறியில் கலந்துக் கொண்டு LED மின் குமிழிகளை தயாரிப்பது தொடர்பான செயல்முறை குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள் உடனடியாக தமது விண்ணப்பங்களை இலங்கை தொழில் பயிற்சி அபிவிருத்தி அதிகார சபை, இலக்கம் 98 ,ஹைலெவல் பிளாசா கட்டடம் ,தெல்கந்தை, நுகேகொடை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகின்றனர்.

 

இந்த பயிற்சி நெறியில் கலந்துக் கொள்வோருக்கு வீடுகளில் வாகனங்கல் பொருத்தும் பல்வேறு வகையான மின் குமிழிகளை தயாரிப்பது குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்படும். அத்துடன் சுய தொழிலாக இதனை செய்ய விரும்புவோருக்கு LED மின் குமிழிகளை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை எங்கிருந்து பெறலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்கப்படும்.

 

பயிற்சியின் இறுதியில் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே இந்த பயிற்சி நெறி பற்றிய மேலதிக தகவல்களை அறிய விரும்புவோர் 0112815009, 0713660033 என்ற தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அல்லது idbcolombo@gmail என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் இது பற்றிய மேலதிக தகவல்களை பெறலாம்.

Web Design by Srilanka Muslims Web Team